வடிவேலு அடுத்து நடிக்கும் படம்.. நாய் சேகரா ஏட்டு ஏகாம்பரமா.. செப்டம்பரில் தெரியும்!

Recommended Video

Vadivelu Interview: நடிகர் வடிவேலு ஹாலிவுட்,நெட் பிளிக்ஸ் போன்றவற்றில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார்

சென்னை: தயாரிப்பாளர் சங்கம் நடிப்பதற்கு பச்சைக் கொடி காட்டிய பிறகு, நடிகர் வடிவேலு நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் வடிவேலு... இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப எந்த இடத்திற்கும், எந்த சூழ்நிலைக்கும், அது குடும்பமாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் சரி, அவர் நடித்த காமெடிக் காட்சிகள் மிகச் சரியாகப் பொருந்தக் கூடியது. இதற்கு சமீபத்திய உதாரணம் தான் உலகம் முழுவதும் பரவிய நேசமணி கேரக்டர். தற்போது அவர் இல்லாத படங்கள் தயாரிப்பாளர்களுக்கு கை கொடுக்காத காரணத்தால், அவர் மீண்டும் படத்தில் நடிக்க பச்சை காட்டிவிட்டனர் போல் உள்ளது.

தலைநகரம் திரைப்படத்தில் வடிவேலு பேசிய வசனம், எனக்காடா என்டு கார்டு போடுறீங்க, எனக்கு எண்டே கிடையாதுடா, என்பது தான். இந்த வசனம் அனைவருக்கும் தெரியும். அந்த வசனம் போல் தான், அவரது சினிமா வாழ்க்கை மீண்டும் தொடங்கியது. இயக்குனர் ஷக்தி சிதம்பரம் வடிவேலுக்காகவே ஸ்பெஷலாக எழுதிய திரைப்படம் தான் பேய் மாமா.

பேய்மாமா

பேய்மாமா

இந்த திரைப்படத்தின் தலைப்பை பதிவு செய்து படபிடிப்பு ஆரம்பமாகும் நிலையில், தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை வைத்து திரைப்படம் பண்ணக்கூடாது என்று போர்க்கொடி உயர்த்தினர். அதற்கு பிறகு பேய் மாமா திரைப்படத்தை நடிகர் யோகி பாபுவை வைத்து திரைப்படம் எடுக்கலாம் என்று இயக்குனர் ஷக்தி சிதம்பரம் முடிவு எடுத்து, நடிகர் யோகி பாபுவை அட்வான்ஸ் கொடுத்து ஒப்புக்கொள்ள வைத்தனர்.

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வந்த திரைப்படம் தான் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி என்ற தலைப்பில் வருவதாக போஸ்டர் வந்தது. இந்த படப்பிடிப்பில் நடிகர் வடிவேலுவுக்கும் இயக்குனர் சிம்பு தேவனுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, இயக்குனர் ஷங்கர் இந்த பிரச்சனையை தயாரிப்பாளர் சங்கத்திற்கு கொண்டு போனார்.

இம்சையாய் போச்சே

இம்சையாய் போச்சே

தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும் கூட நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24ஆம் புலிகேசி திரைப்படத்தில் நடிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். இயக்குனர் ஷங்கர், இந்த திரைப்படத்தின் மூலம் எனக்கு ஒன்பது கோடி ரூபாய் நஷ்டம் என்பதால், நடிகர் வடிவேலு நஷ்டஈடு தரவேண்டும் என்று கூறினார். ஆனால், அந்த தொகையை கொடுக்க நடிகர் வடிவேலு ஒப்பு கொள்ளவில்லை. இந்த பிரச்சனையால் நடிகர் வடிவேலுவை புதிய திரைப்படத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்தினர் கூறினார்கள். இந்த நிலையில் ஒரு வழியாக பிரச்சனை அனைத்தும் முடிந்தது.

செப்டம்பரில் சூட்டிங்

செப்டம்பரில் சூட்டிங்

நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்க வருகிறார். ஆனால் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி திரைப்படம் வருமா என்பது கேள்வி கூறிதான்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இயக்குநர் சுராஜ் வடிவேலுவை கதாநாயகனாக வைத்து முழுநீள காமெடி திரைப்படத்துக்கான திரைக்கதையை உருவாக்கினர். இப்பொழுது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.

நாய் சேகரா ஏட்டு ஏகாம்பரமா?

நாய் சேகரா ஏட்டு ஏகாம்பரமா?

இந்த திரைப்படம் தலைநகரம் திரைப்படத்தில் வரும் நாய் சேகர் கதாபாத்திரம் மாதிரியும், மருதமலை திரைப்படத்தில் வரும் ஏட்டு ஏகாம்பரம் கதாபாத்திரம் மாதிரியும் இருக்கும் என்று இயக்குனர் கூறினார். மதுரையில் இருக்கும் நடிகர் வடிவேலுவிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க சென்றனர், அதற்கு செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்கட்டும், அதன் பிறகு நான் மீடியா வெளிச்சத்திற்கு வருகிறேன் என்று கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X