மனோஜ் மறைவு.. அய்யோ தாங்க முடியலயே.. தந்தையை எப்படி தேற்றுவது.. வடிவேலு குமுறல்!

சென்னை: இயக்குநர் பாரதிராஜா மகனின் மறைவு தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 48 வயதில் யாருமே எதிர்பார்க்காத வயதில் இப்படி ஒரு அகால மரணத்தை கண்டு பலரும் மனவேதனை அடைந்துள்ளனர். மனோஜ் உடல் நீலாங்கரையில் உள்ள வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நடிகர், நடிகைகள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் மனோஜ் மறைவுக்கு நடிகர் வடிவேலு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், இந்த செய்தியை கேட்டு நான் தடுமாறி விட்டேன், மனது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. சென்னையில் இருந்து நான்கு நாட்களுக்கு முன் தான் குலசாமியை கும்பிடுவதற்காக சொந்த ஊருக்கு வந்தேன். செய்தியை கேள்விப்பட்டதும் மனது பதை பதைத்து விட்டது. யாரிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. மனிதனுடைய உயிர் நிலையில்லாமல் ஆகிவிட்டது என்பது இந்த மரணத்தை பார்க்கும்போது தெரிகிறது.

Manoj Bharathiraja vadivelu

தாங்கமுடியாத வேதனை: தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆளுமை பாரதிராஜா, சினிமாவில் இருப்பவர்கள் அனைவரும் பாரதிராஜாவை நினைத்து தான் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தோம். அண்ணன் இப்படி இருக்கிறாரே, அவருக்கு என்ன ஆகுமோ ஏதாகுமோ என்று அவரை நினைத்து நாங்கள் வருத்தப்பட்டு கொண்டு இருந்தோம். ஆனால், திடீரென பாரதிராஜாவின் மகன், 48 வயதில் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் தவித்துப்போனேன். இது பாரதிராஜாவிற்கு மிகப் பெரிய இழப்பு, ஆண்டவன் ஏன் இப்படி சோதிக்கிறார் என்று தெரியவில்லை. நான் மனோஜுடன் ஏபிசிடி படத்தில் நடித்திருக்கிறேன். அந்த திரைப்படத்தில் நடித்த நடிகை நந்தனாவை தான் அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதேபோல, ஈர நிலம் என்ற படத்திலும் நான் மனோஜுடன் சேர்ந்து நடித்து இருக்கிறேன். இந்த செய்தியை கேட்டதும் அவை அனைத்தும் என் கண் முன் வந்து செல்கிறது.

Manoj Bharathiraja vadivelu

என்னல தாங்கவே முடியல: 48 வயது மகனை பறிகொடுத்த தகப்பனின் நிலைமை எப்படி இருக்கும், அந்த தாயின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நினைக்கும் போதே, எனக்கு கண்ணீர் வருகிறது. எனக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள், தமிழ் சினிமாவில் இருக்கும் அனைவருக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். 48 வயது, மகனை பறிகொடுத்த பாரதிராஜாவிற்கு இது எப்பேர்பட்ட மனவலியாக இருக்கும், என்பதை என்னால் உணர முடிகிறது. இந்த விஷயத்தை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. பாரதிராஜா அண்ணன் மனதை தளர விட்டு விடக்கூடாது. மனோஜின் மனைவி மற்றும் குடும்பத்தார் என அனைவரும் மன தைரியத்தோடு இருக்க வேண்டும்.

Manoj Bharathiraja vadivelu

இந்த வயதில் ஹார்ட் அட்டாக்கா: அதேப்போல தான், இளையராஜாவின் மகள் பவதாரணி இறந்தார். நேற்று முன்தினம் கராத்தே மாஸ்டர் ஹுசைன் மரணம் அடைந்தார். இந்த துயர செய்தியில் இருந்து மீள்வதற்குள், மற்றொரு சோகம் மீண்டும் என்னை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. இளைஞர்கள் அனைவரும் தங்களது உடல் நலனை பேணி காப்பதில் கவனமாக இருக்க வேண்டும். மனோஜூக்கு ஹார்ட் அட்டாக் வரக்கூடிய வயசா, அவருக்கு எப்படி ஹார்ட் அட்டாக் வந்தது என்று எனக்கு தெரியவில்லை. பாரதிராஜா ஐய்யா, தைரியமாக இருங்க, மனதை விட்டு விடாதீர்கள் என்று நடிகர் வடிவேலு, மனோஜை இழந்து வாடும் குடும்பத்திற்கு தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறியுள்ளார்.

மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் இறுதிச் சடங்குகள் சென்னை, நீலாங்கரையில் உள்ள கபாலீஸ்வரன் நகரில் உள்ள பாரதிராஜாவின் வீட்டில் நடைபெற உள்ளது.

FAQs
மறைந்த நடிகர் மனோஜ் பாரதி ராஜாவின் மனைவி பெயர் என்ன?

மறைந்த நடிகர் மனோஜ் பாரதி ராஜாவின் மனைவி பெயர் நந்தனா

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X