நடிகர் வடிவேலுவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்.. வைகை புயலுக்கு குவியும் வாழ்த்துக்கள்!
சென்னை : நடிகர் வடிவேலு தமிழின் மிகச்சிறந்த காமெடி நடிகராக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருபவர்.
கடந்த சில மாதங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த இவர், தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின்மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு, தற்போது சந்திரமுகி 2, மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் வடிவேலு
நடிகர் வடிவேலு வைகை புயல் என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். தன்னுடைய பாடி லேங்குவேஜ் மற்றும் கவுண்டர் காமெடியால் ரசிகர்களை கட்டிப் போட்ட இவர், ஏராளமான படங்களில் நடித்து ரசகிர்களை கவர்ந்துள்ளார். பல படங்களில் ஹீரோவிற்கு இணையான கேரக்டர்களில் நடித்துள்ளார்.

ஹீரோவாக கலக்கல்
மேலும் இம்சை அரசன் 23ம் புலிகேசி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்த வடிவேலு, சில மாதங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். மெர்சல் படத்தில் விஜய்யுடன் இணைந்து முக்கியமான கேரக்டரில் நடித்திருந்த இவர் தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின்மூலம் கோலிவுட்டில் தன்னுடைய ரீ என்ட்ரியை கொடுத்துள்ளார்.

வடிவேலு ரீ-என்ட்ரி
இந்நிலையில் மாமன்னன், சந்திரமுகி 2 என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்சுடன் வடிவேலு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சந்திரமுகி 2 படத்தில் வடிவேலு
சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் இணைந்து வடிவேலு நடித்திருந்தார். அந்தப் படத்தின் வெற்றிக்கு இவர்கள் இருவரும் இணைந்து செய்திருந்த காமெடியும் முக்கியமான காரணமாக அமைந்தது. இந்நிலையில், தற்போது ராகவா லாரன்சுடன் இணைந்து சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார் வடிவேலு.

வடிவேலுவிற்கு கௌரவ டாக்டர் பட்டம்
வடிவேலுவின் ரீ என்ட்ரி அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்து வருகிறது. இந்நிலையில், நடிகர் வடிவேலுவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் இயங்கிவரும் சமூக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில், பொழுது போக்கு பிரிவின் கீழ் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

குவியும் வாழ்த்துக்கள்
முன்னதாக நடிகர் ராகவா லாரன்சிற்கு சமூக சேவைக்கான டாக்டர் பட்டத்தை இந்த அமைப்பு வழங்கி கௌரவித்தது. இந்நிலையில் தற்போது வடிவேலுவிற்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் வடிவேலுவிற்கு சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











