21 ஆண்டுகளுக்குப் பிறகு கமலுடன் இணையும் பிரபலம்.. உங்கள் நான் மேடையில் சொன்னது இதைத்தானா!

Recommended Video

60 years of Kamal Hassan | Ungal Naan | Ilayaraja | Rajinikanth | Vadivelu Speech

சென்னை: கமலுடன் தலைவன் இருக்கின்றான் படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் 21 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைவன் இருக்கின்றான் படம் 2008 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. மோகன்லால், வெங்கடேஷ் மற்றும் ரிஷி கபூர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் பணப் பிரச்சனையால் அந்த புராஜெக்ட் அப்படியே டிராப் செய்யப்பட்டது.

இந்நிலையில் தலைவன் இருக்கின்றான் படம் மீண்டும் தொடங்கும் என்றும் அந்தப் படத்திற்கு ஏ.அர்.ரஹ்மான் இசையமைப்பார் என்றும் நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிவிட்டரில் தெரிவித்தார். இதுதொடர்பாக கமல்சந்தித்த போட்டோக்களை ஏஆர் ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்தியன் 2க்கு பிறகு

இந்தியன் 2க்கு பிறகு

தேவர் மகனின் தொடர்ச்சியாக தலைவன் இருக்கின்றான் படம் இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்தியன் 2 படத்தை முடித்தவுடன் தலைவன் இருக்கின்றான் படத்தின் பணிகள் தொடங்கும் என தெரிகிறது.

நடிகர் வடிவேலு..

நடிகர் வடிவேலு..

இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸுடன் இணைந்து ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிகர் வடிவேலுவும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

உறுதி செய்த வடிவேலு

உறுதி செய்த வடிவேலு

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கமலின் உங்கள் நான் நிகழ்ச்சியில் பங்கேற்ற நகைச்சுவை நடிகரான வைகைப்புயல் வடிவேலு இதனை உறுதி செய்யும் வகையில் பேசியிருக்கிறார்.

தேவர்மகன் படம்

தேவர்மகன் படம்

அதாவது, கமலுடன் சிங்காரவேலன் படத்தில் நடித்த போது அவருடைய அடுத்த படமான தேவர்மகன் படத்தில் வாய்ப்பளித்தது குறித்தும் அப்போது நடந்த சுவாரசிய சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

விடிந்துவிட்டது

விடிந்துவிட்டது

அதன் தொடர்ச்சியாக இப்போது இந்த மேடையில் ஏறியிருக்கிறேன். இனி எனக்கு விடிவுகாலம்தான்.. விடிந்துவிட்டது.. என்றார். அவரது இந்த பேச்சால் கமலின் அடுத்த படமான தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கவுள்ளார் என தெரிகிறது.

அஜித்துடன்..

அஜித்துடன்..

தேவர் மகன் படம் 1992ஆம் ஆண்டு வெளியானது. அதனை தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு கமலுடன் காதலா காதலா படத்தில் செக்யூரிட்டி சிங்காரமாக நடித்தார் வடிவேலு. அந்தப் படத்திற்கு பிறகு 21 வருடங்கள் கழித்து தலைவன் இருக்கின்றான் படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளார். அண்மையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X