Actor Vadivelu: மீண்டும் சுந்தர் சியுடன் இணையும் வடிவேலு..தமன்னாவும் இருக்காங்க.. சூப்பரப்பு!

சென்னை: அரண்மனை 4 படத்திற்கு பிறகு அடுத்ததாக கலகலப்பு 3 படத்தை இயக்கவுள்ளார் சுந்தர் சி. அவரது சொந்த தயாரிப்பில், இயக்கத்தில் இந்த படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் சிவா, விமல் உள்ளிட்டவர்கள் முன்னணி கேரக்டர்களில் நடிக்க உள்ளனர். படத்தில் ஹீரோயினாக வாணி போஜன் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே அடுத்ததாக தமன்னாவுடன் இணைந்து மீண்டும் ஹாரர் படத்தை இயக்க சுந்தர் சி கமிட் ஆகியுள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமன்னா லீட் கேரக்டரில் நடிக்கவுள்ள இந்தப் படத்தில் சுந்தர் சி நடிப்பாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Vadivelu Sundar C Tamannaah tamil cinema Kalakalappu movie

அரண்மனை 4 படம்: சுந்தர் சி இயக்கத்தில், நடிப்பில், தயாரிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் மிகப் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் முந்தைய பாகம் அரண்மனை 3 படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது அரண்மனை 4 மிகப்பெரிய அளவில் மாஸ் காட்டியுள்ளது. வசூல் மழை பொழிந்து வருகிறது. 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. இதையடுத்து மீண்டும் பேய் ட்ரெண்டை கோலிவுட்டில் புகுத்தியுள்ளார் சுந்தர் சி. இந்த படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக எந்த படத்தை இயக்க உள்ளார் என்பது குறித்து தகவல்கள் முன்னதாக சமூக வலைதளங்களில் வெளியாகின.

கலகலப்பு 3 படம்: அடுத்ததாக கலகலப்பு 3 படத்தை சுந்தர் சி இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் விமல். சிவா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் வாணி போஜன் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் வேலைகளில் தற்போது பிசியாக இருக்கும் சுந்தர் சி, அடுத்ததாக மீண்டும் பேய் பட களத்தில் இறந்துள்ளார். நடிகை தமன்னா லீட் கேரக்டரில் நடிக்கவுள்ள ஒரு ஹாரர் படத்தை அவர் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமன்னா நடிக்கும் ஹாரர் படம்: இந்த படத்தின் கதை பூபாலன் என்ற இயக்குனருடையது என்றும் அவரிடம் இருந்து தயாரிப்பு தரப்பு இந்த கதையை வாங்கி சுந்தர் சி இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதையை கேட்டு உடனடியாக தமன்னா ஓகே சொன்னதாகவும் கூறப்பட்டுள்ளது. அரண்மனை 4 படத்தில் தமன்னா சுந்தர்சியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் தமிழில் அவருக்கு மீண்டும் மார்க்கெட்டை உருவாக்கி தந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஹாரர் படத்திலேயே அவர் இணையவுள்ளது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் தமன்னாவுடன் இணைந்து நடிகர் வடிவேலு சுந்தர்சியுடன் கைகோர்க்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமன்னாவுடன் இணையும் வடிவேலு: சில காலங்கள் படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த வடிவேலு தற்போது மீண்டும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் அவர் மீண்டும் கோலிவுட்டில் என்ட்ரி தந்துள்ளார். மேலும் தொடர்ந்து சந்திரமுகி 2 படத்தில் இவர் சிறப்பாக நடித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் ஹாரர் படத்தில் அவர் இணையவுள்ளது குறிப்பிடப்பட்டது. தலைநகரம் உள்ளிட்ட பல படங்களில் சுந்தர் சியுடன் இணைந்து வடிவேலு காமெடி கலாட்டா செய்துள்ள நிலையில் மீண்டும் சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தமன்னாவும் நடிக்கவுள்ள நிலையில் படத்தின் கதைக்களம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்,

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X