கமல்ஹாசன் எனக்கு கடவுள் மாதிரி.. என்னோட வாழ்க்கையையே புரட்டிப் போட்டுட்டாரு.. வடிவேலு நெகிழ்ச்சி!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் தேவர்மகன் படம் மிகச் சிறப்பாக அமைந்த படங்களில் ஒன்று. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன், கௌதமி, ரேவதி, வடிவேலு உள்ளிட்டவர்கள் நடித்து படத்தை சிறப்பாக்கியிருந்தனர். என் ராசாவின் மனசிலே படத்துக்கு பிறகு இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு நடிகர் வடிவேலுக்கு கிடைத்தது.

வடிவேலு வாழ்க்கையை புரட்டிப் போட்ட படங்களில் தேவர்மகனுக்கு முதன்மையான இடம் உண்டு. இதனிடையே பேட்டி ஒன்றில் பேசிய வடிவேலு, நடிகர் கமல்ஹாசன் தனக்கு கடவுள் மாதிரி என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து கமல்ஹாசனின் சிங்காரவேலன் உள்ளிட்ட படங்களிலும் முக்கியமான காமெடி கேரக்டர்களில் வடிவேலு நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Kamal haasan Vadivelu

நடிகர் வடிவேலு: நடிகர் வடிவேலு என் ராசாவின் மனசிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து தொடர்ந்து தமிழின் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் ஆகவும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் தன்னை மாற்றிக் கொண்டவர். இம்சை அரசன் 23ம் புலிகேசி உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்து மாஸ் காட்டியவர். தொடர்ந்து ஒரு காலகட்டத்தில் வடிவேலு இல்லாத படங்களே இல்லை என்ற நிலைக்கு தமிழ் சினிமாவை கொண்டு வந்தவர் வடிவேலு. ஆனால் துவக்கத்தில் தன்னை சினிமாவில் நிரூபிக்க வடிவேலுவுக்கு அதிகமான நபர்களின் துணை தேவைப்பட்டது.

தேவர் மகன் படம்: என் ராசாவின் மனசிலே படத்துக்கு பிறகு நடிகர் கமல்ஹாசனின் பார்வை வடிவேலு மீது பட்டது. வடிவேலுக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்த படம் தேவர்மகன். இந்த படத்தில் காமெடியனாக மட்டுமில்லாமல் கேரக்டர் ரோலிலும் நடித்து ஏராளமான ரசிகர்களை அவர்களின் இதயத்தை தொட்டிருந்தார் வடிவேலு. அந்த வகையில் இந்த படத்தில் இசக்கி என்ற கேரக்டரில் நடித்து கிளைமாக்சில் தன்னுடைய ஒரு கையை இழந்து தவிப்பதாக காணப்படும். படத்தில் அவரை துவக்கத்தில் காமெடியனாகவும் தொடர்ந்து கேரக்டர் ரோலிலும் தேவர் மகன் படத்தில் சிறப்பாக பயன்படுத்தியிருந்தார் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் கடவுள் மாதிரி: தேவர்மகன் படத்தின் இந்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்தி கொண்டார் வடிவேலு. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெரும் வகையில் இந்த படத்தை அமைத்துக் கொண்டார். இந்நிலையில் வடிவேலு கொடுத்த பேட்டி ஒன்றில் கமல்ஹாசன் தனக்கு கடவுள் மாதிரி என்று கூறியதை பார்க்க முடிந்தது. தன்னிடம் இருக்கும் திறமையை நம்பி தேவர் மகன் படத்தில் அவர் தனக்கு வாய்ப்பு கொடுத்து தன்னுடைய வாழ்க்கையை யூடர்ன் செய்து விட்டதாகவும் வடிவேலு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Kamal haasan Vadivelu

வடிவேலுவை பாராட்டிய ஜாம்பவான்: இந்தப் படத்தில் கமல்ஹாசன் மற்றும் சிவாஜி கணேசன் என இருவேறு ஜாம்பவான்களுக்கிடையில் தான் நடித்ததாகவும், நடிகர் சிவாஜியே தன்னுடைய கேரக்டர் மிகவும் சிறப்பாக அமைந்திருந்ததாக பாராட்டு தெரிவித்ததாகவும் வடிவேலு மேலும் குறிப்பிட்டுள்ளார். முன்னணி நடிகர்களுட,ன் இணைந்து நடித்துவந்த வடிவேலு, இடையில் சில காலங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X