Actor Vadivelu: உடல்நலம் பாதிக்கப்பட்ட வெங்கல் ராவ்.. நடிகர் வடிவேலு தாராளம்.. ரூ.1 லட்சம் உதவி!

சென்னை: நடிகர் வெங்கல் ராவ், வடிவேலு உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் காமெடி கலாட்டா செய்தவர். இந்நிலையில் தன்னுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாக வெங்கல் ராவ், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோ மூலம் திரைத்துறையினரிடம் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் வெங்கல் ராவ் சிகிச்சைக்காக அடுத்தடுத்து பண உதவி செய்தனர். நடிகர் வடிவேலுவுடன் இணைந்து வெங்கல் ராவ் அதிகமாக நடித்துள்ள நிலையில் அவர் சிகிச்சைக்காக உதவி அளிப்பாரா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் அதிகமாக எழுப்பப்பட்டது.

Vadivelu vengal rao tamil cinema

நடிகர் வெங்கல் ராவ்: நடிகர் வடிவேலு உள்ளிட்ட பல முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகர் வெங்கல் ராவ். ஆந்திராவை சேர்ந்த இவர் தமிழ் படங்களில் பல காமெடி கேரக்டர்களை ஏற்று நடித்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு கை மற்றும் ஒரு கால் செயல்படவில்லை என்றும் வெங்கல் ராவ் வீடியோ மூலம் தெரிவித்திருந்தார். தனக்கு சரியாக பேசக்கூட முடியவில்லை என்றும் சினிமா கலைஞர்கள் தனக்கு நிதியுதவி செய்ய வேண்டும் என்றும் அந்த வீடியோவில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

வெங்கல் ராவிற்கு நிதியுதவி: இதையடுத்து நடிகர் சிம்பு வெங்கல் ராவ் சிகிச்சைக்காக இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருந்தார். இதே போல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் முன்னதாக 25 ஆயிரம் ரூபாய் கொடுத்திருந்தார். சிகிச்சைக்காக அடுத்தடுத்த நடிகர்கள் பண உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் வடிவேலுவுடன் அதிகமான படங்களில் நடித்துள்ள வெங்கல் ராவிற்கு சிகிச்சைக்காக வடிவேலு உதவி செய்வாரா என்று சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர். அவர்களது கேள்விகளுக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

நடிகர் வடிவேலு நிதியுதவி: நடிகர் வடிவேலு வெங்கல் ராவ் சிகிச்சைக்காக தற்போது 1 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். மேலும் தொலைபேசி மூலம் வெங்கல் ராவின் உடல்நிலை குறித்தும் வடிவேலு விசாரித்ததாக தெரியவந்துள்ளது. முன்னதாக சின்னத்திரை பிரபலம் கேபிஒய் பாலாவும் வெங்கல் ராவிற்கு சிக்ச்சைக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். தனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் என்றும் அவரை மீண்டும் சினிமாவில் பார்க்க ஆசையாக இருக்கிறது என்றும் கூறியிருந்த பாலா, அனைவரையும் உதவி செய்யவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

உடல்நிலை குறித்த வீடியோ: சினிமாவில் வில்லன் நடிகராக தன்னுடைய பயணத்தை துவங்கியவர் வெங்கல் ராவ். இதையடுத்து காமெடி நடிகராக மாறி, வடிவேலுவின் காமெடி காட்சிகளில் தொடர்ந்து நடித்து வந்தார். வடிவேலு -வெங்கல் ராவ் காம்பினேஷனில் வெளியான பல காமெடி காட்சிகள் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட்டாக காணப்படுகின்றன. இந்நிலையில் திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போனார் வெங்கர் ராவ். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய உடல்நிலை குறித்த ஒரு வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X