”இதென்ன தெனாலிராமனுக்கு வந்த சோதனை”. நடிகர் வடிவேலு வீட்டை முற்றுகையிட முயற்சி!!
சென்னை: நடிகர் வடிவேலு நடித்துள்ள தெனாலி ராமன் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தெலுங்கு அமைப்பைச் சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அரசியல் காரணங்களால் கடந்த சில வருடங்களாக நடிக்காமலேயே இருந்து வந்தார் வடிவேலு. இந்த நிலையில் தற்போது அவர் தெனாலிராமன் என்ற நகைச்சுவை படத்தில் நடித்துள்ளார்.
அரசனாகவும், தெனாலிராமனாகவும் இரு வேடங்களிலும் நடித்துள்ளார் வடிவேலு. இந்தப் படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன்புதான் வெளியிடப்பட்டன.

படத்துக்கு சிக்கல்:
தற்போது இப்படத்துக்கு ஒரு சிக்கல் வந்துள்ளது. இப்படத்தில் கிருஷ்ணதேவராயரை தவறான முறையில் சித்தரித்துள்ளதாக தெலுங்கு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

போலீசார் கைது நடவடிக்கை:
இதனால் இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் வடிவேலு வீட்டை, தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவையினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முற்பட்டனர்.

போலீஸ் பாதுகாப்பு:
போராட்டம் நடத்த ஊர்வலமாக வந்துகொண்டிருந்தபோதே, போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்தப் போராட்டம் காரணமாக வடிவேலு வீடு உள்ள பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

இது ”அது” கிடையாதுப்பா:
இப்படத்தில் கிருஷ்ணதேவராயர் என்ற பெயரையே பயன்படுத்தவில்லை, இது கிருஷ்ணதேவராயர் கதையும் அல்ல என்று இப்படத்தின் இயக்குநர் ஏற்கனவே விளக்கம் அளித்த போதும் அந்த அமைப்பினர் விடுவதாக இல்லை.
அட இதென்ன தெனாலிராமனுக்கு வந்த சோதனை!!


Click it and Unblock the Notifications











