டிவிட்டரில் இணைந்த வடிவேலு.. போட்டோவுடன் போட்ட பதிவு.. இதாவது ஒரிஜினலா?

சென்னை: நடிகர் வடிவேலு டிவிட்டரில் இணைந்துள்ளதாக ஒரு பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் டாப் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. யாரையும் புண்படுத்தாமல் தன்னைத் தானே கேலி செய்துக் கொண்டு காமெடி செய்வதில் வல்லவர்.

அவரது பாடி லாங்குவேஜ் பேசும் ஸ்லாங்கிற்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர நடிகராகவும் வலம் வருகிறார். நடிகராக மட்டுமின்றி சிறந்த பாடகராகவும் உள்ளார் வடிவேலு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

காமெடி மூலம் முத்திரை

காமெடி மூலம் முத்திரை

2011ஆம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலின்போது தேமுதிக இடம்பெற்றிருந்த அதிமுக கூட்டணிக்கு எதிராக வடிவேலு பிரச்சாரம் செய்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை எவ்வளவு மோசமாக விமர்சிக்க முடியுமோ அவ்வளவு மோசமாக விமர்சித்தார்.

இம்சை அரசன் 24ம் புலிகேசி

இம்சை அரசன் 24ம் புலிகேசி

இதனால் அதன்பிறகு வடிவேலுவுக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இருப்பினும் ஒரு சில படங்களில் தலைக்காட்டி வந்தார் வடிவேலு. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு கூட்டணியில் மாபெரும் வெற்றிபெற்ற இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தின் 2வது பாகத்தை இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற பெயரில் உருவாக்க திட்டமிட்டனர்.

Recommended Video

விரைவில் ரீ என்ட்ரியாகும் வடிவேலு.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
அடம்பிடித்த வடிவேலு

அடம்பிடித்த வடிவேலு

படத்தின் பணிகள் துவங்கியது முதலே இயக்குனர் சிம்புதேவனுக்கு வடிவேலுக்கும் இடையே கருத்து வேறுப்பாடுகள் ஏற்பட்டது. சிம்புதேவன் சொன்ன காட்சிகளில் வடிவேலுவுக்கு சம்மதம் இல்லாததால் தொடர்ந்து படத்தின் திரைக்கதையில் மாற்றம் செய்ய கோரினார் வடிவேலு.

ரெட் கார்டு வாங்கிய ஷங்கர்

ரெட் கார்டு வாங்கிய ஷங்கர்

படத்தின் பணிகள் துவங்கியது முதலே இயக்குனர் சிம்புதேவனுக்கும் வடிவேலுக்கும் இடையே கருத்து வேறுப்பாடுகள் ஏற்பட்டது. சிம்புதேவன் சொன்ன காட்சிகளில் வடிவேலுவுக்கு சம்மதம் இல்லாததால் தொடர்ந்து படத்தின் திரைக்கதையில் மாற்றம் செய்ய கோரினார் வடிவேலு.

மீண்டும் வருகிறார் வடிவேலு

மீண்டும் வருகிறார் வடிவேலு

இதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தனது தவறுக்காக கண்கள் கலங்கினார் வடிவேலு. இந்நிலையில் வடிவேலு மீண்டும் நடிக்க வருகிறார் என கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது. இதனால் வடிவேலு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில் தற்போது வடிவேலு டிவிட்டரில் இணைந்துள்ளார்.

ஒரிஜினால் கணக்கா?

ஒரிஜினால் கணக்கா?

தனது கணக்கில் இருந்து கண்ணாடி அணிந்துள்ள போட்டோவை ஷேர் செய்துள்ள வடிவேலு ட்விட்டரில் இணைவது மகிழ்ச்சி! தமிழ் மக்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். இது ஒரிஜினல் ஐடியா அல்லது ஃபேக் ஐடியா என தெரியவில்லை. ஏனெனில் ஏற்கனவே ஒரு முறை வடிவேலு பெயரில் போலி கணக்கு வலம் வந்தது.

அப்படியே ஓடிப்போயிடு

அப்படியே ஓடிப்போயிடு

இந்நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள், இதுவும் போலி கணக்குதான் என்று கூறி வருகின்றனர். மேலும் எத்தனை முறைதான் இவரை டிவிட்டரில் இணைப்பீங்க என்றும் கேட்டு வருகின்றனர். வடிவேலு பெயரில் உள்ள டிவிட்டை பார்த்த இந்த ரசிகர், மறுபடியும் ஃபேக் ஐடியா.. அப்படியே ஓடிப்போயிடு என பதிவிட்டுள்ளார்.

சார்லி அப்படிதான் செய்தார்

சார்லி அப்படிதான் செய்தார்

இந்நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள், இதுவும் போலி கணக்குதான் என்று கூறி வருகின்றனர். மேலும் எத்தனை முறைதான் இவரை டிவிட்டரில் இணைப்பீங்க என்றும் கேட்டு வருகின்றனர். வடிவேலு பெயரில் உள்ள ட்வீ ட்டை பார்த்த இந்த ரசிகர், மறுபடியும் ஃபேக் ஐடியா.. அப்படியே ஓடிப்போயிடு என பதிவிட்டுள்ளார்.

 சார்லி அப்படிதான் செய்தார்

சார்லி அப்படிதான் செய்தார்

கடந்த சில நாட்களாக பிரபல நடிகர்களின் பெயர்களில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்படுகிறது. நடிகர்கள் மயில்சாமி, சார்லி, செந்தில் உள்ளிட்டோரின் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டன. அதனை மறுத்த அவர்கள் போலீஸிலும் புகார் அளித்தனர்.

விளக்கம் அளிக்க வேண்டும்

விளக்கம் அளிக்க வேண்டும்

இதேபோல் நடிகர் விஜய்யின் மகன் மற்றும் மகள் பெயரிலும் ட்விட்டரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டன. இதனை தொடர்ந்து அவர்களுக்கு எந்த சோஷியல் மீடியாவிலும் கணக்கு இல்லை என விஜய் தரப்பு விளக்கம் அளித்தது. தற்போது வடிவேலு பெயரில் தொடங்கப்பட்டிருப்பதும் ஃபேக் அக்கவுண்ட்டா அல்லது ஒரிஜினலா என்பது குறித்து அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X