உதயநிதி நடிக்கும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு..இயக்குநர் யாருன்னு பாருங்க!

சென்னை: நடிகர் வடிவேலு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் ஹிட் இயக்குநருடன் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. மற்றவர்களை கேலி கிண்டல் செய்யாமல் தன்னைத்தானே டேமேஜ் செய்து கொண்டு சிரிக்க வைப்பவர்.

டயலாக் டெலிவரி, பாடி லாங்குவேஜ், எக்ஸ்பிரஷன்ஸ் என எப்படியெல்லாம் ரசிகர்களை சிரிக்க வைக்க முடியுமோ அப்படியெல்லாம் ரசிகர்களை சிரிக்க வைத்து வந்தார்.

ரெட் கார்டு பெற்ற வடிவேலு

ரெட் கார்டு பெற்ற வடிவேலு

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் தயாரித்த 24 ஆம் புலிகேசி படத்தில் நடிப்பதாக கூறி விட்டு பின்னர் நடிக்க மறுத்தார் வடிவேலு. இதனால் இயக்குநர் ஷங்கர் தனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி வடிவேலு தொடர்ந்து நடிக்கக் கூடாது என ரெட் கார்டு பெறவைத்தார்.

ரெட் கார்டு நீக்கம்

ரெட் கார்டு நீக்கம்

இதைத்தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் வடிவேலு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார். வடிவேலு நடிப்பில் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் வடிவேலுவுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு நீக்கப்பட்டது.

மாரி செல்வராஜ் இயக்கம்

மாரி செல்வராஜ் இயக்கம்

இதையடுத்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார் நடிகர் வடிவேலு. அந்த வகையில் நடிகர் வடிவேலு பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார்.

முக்கிய கதாப்பாத்திரம்

முக்கிய கதாப்பாத்திரம்

இந்தப் படத்தில் வடிவேலு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இயக்குநர் மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை இயக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் அந்தப் படத்திற்கு இன்னும் வேலைகள் செய்யப்பட வேண்டியுள்ளதால் முதலில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்குகிறார் மாரி செல்வராஜ்.

Recommended Video

Vadivelu Emotional Speech | Lyca Productions No.23 Film Launch Event
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

இதனிடையே நடிகர் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் நடிகர் வடிவேலுவின் கெட் அப் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X