சூரரைப்போற்று பார்த்தேன்.. சூர்யா அழும் இடங்களிலெல்லாம் கண்ணீர்விட்டேன்.. நடிகர் வடிவேலு உருக்கம்!

சென்னை : நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்து கண்ணீர் விட்டு அழுததாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான படம் சூரரைப்போற்று. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி உள்ளது.

முன்கூட்டியே கசிந்ததால்

முன்கூட்டியே கசிந்ததால்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் திறக்க தாமதமானதால் இந்தப் படம் ஓடிடி தளமான அமேஸான் பிரைமில் கடந்த 11 ஆம் தேதி இரவு ரிலீஸானது. 11ஆம் தேதி நள்ளிரவு ரிலீஸ் ஆகவேண்டிய இந்தப் படம் இணையத்தில் கசிந்ததால் முன்கூட்டியே ரிலீஸானது.

புகழும் பிரபலங்கள்

புகழும் பிரபலங்கள்

படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சூர்யாவின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். சூர்யாவின் கேரியரில் இந்தப்
படம் மாஸ்டர் பீஸாக இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாரதிராஜா உட்பட திரைத்துறை பிரபலங்கள் பலரும் சூரரைப்போற்று படத்தை புகழ்ந்து வருகின்றனர்.

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

இதனால் அமேஸான் பிரைமில் வியூஸ்களை குவித்து வருகிறது சூரரைப்போற்று திரைப்படம். இந்நிலையில் நடிகர் வடிவேலு சூரரைப்போற்று திரைப்படத்தை பார்த்து உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.

கண்ணீர் வருகிறது

கண்ணீர் வருகிறது

இதுதொடர்பாக அவரது டிவிட்டர் பக்கத்தில், தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது‌. இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் என பதிவிட்டுள்ளார்.

உண்மையா வாழ்ந்து இருக்கீங்க

உண்மையா வாழ்ந்து இருக்கீங்க

அவரது இந்த பதிவு சுமார் 40 ஆயிரம் லைக்ஸ்களை பெற்றுள்ளது. நடிகர் வடிவேலுவின் இந்த பதிவை பார்த்த இந்த நெட்டிசன், சூரரை போற்று உண்மையிலே,வெற்றியை அடைய போராட துடிக்கும் ஒரு மனிதனின் வாழ்வியலை, தத்துரூபமாக திரையில் பிரதிபலிக்கும் ஒரு படம்.. சூர்யா, நெடுமாறன் ராஜாங்கமா நடிக்காம, உண்மையா வாழ்ந்து இருக்கீங்க.. ஜிவி பிரகாஷ் பிஜிஎம் புல்லரிக்குது.. என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

எதிர்பார்த்து காத்திருக்கோம்

எதிர்பார்த்து காத்திருக்கோம்


சூரரைப்போற்று படம் குறித்த நடிகர் வடிவேலுவின் பதிவை பார்த்த இந்த நெட்டிசன், உங்கள் படங்கள் எப்போது வரும் உங்களை படத்தில் காண எதிர்பார்த்து காத்திருக்கோம் என வடிவேலு மீதான ஆர்வத்தை கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

அழுதுகொண்டே இருக்கிறோம்

அழுதுகொண்டே இருக்கிறோம்

மற்றொரு நெட்டிசனான இவர் உங்களை எப்போது மறுபடியும் காண்பது என்று ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் அழுதுகொண்டே இருக்கிறோம்.. எப்போது வந்தாலும் எங்கள் வைகைப்புயல் மக்கள் மனதில் இருக்கும் சிம்மாசன ராஜா தான்... என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X