'வீட்டைத் தாண்டி நீயும் வரகூடாது, நானும்..' கொரோனாவுக்கு வைகைப்புயல் வெளியிட்ட அடுத்த வீடியோ!

By

சென்னை: கொரோனாவுக்காக நடிகர் வடிவேலு வெளியிட்டுள்ள புதிய வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

'வீட்டைத் தாண்டி நீயும் வரகூடாது, நானும்..' வடிவேலுவின் அடுத்த வீடியோ!

உலகம் முழுவதும் மிரட்டிக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். இதற்கு உலகம் முழுவதும் 26 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால் பல்வேறு நாடுகள் ஊரடங்கை

கடைபிடித்து வருகின்றன. மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

வேகமாகப் பரவுகிறது

வேகமாகப் பரவுகிறது

இந்த தொற்று நோய் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடிகர், நடிகைகளும் வீடுகளுக்குள் இருக்கின்றனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,393-ல் இருந்து 23,077 ஆக உயர்வடைந்துள்ளது. பலி எண்ணிக்கை இன்று 718 ஆக உயர்வடைந்து உள்ளது.

வடிவேலு புதிய வீடியோ

வடிவேலு புதிய வீடியோ

நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் கொரோனா விழிப்புணர்வுக்காக வீடியோக்களை வெளியிட்டிருந்தனர். நடிகர் வடிவேலுவும் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இப்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'மனிதநேயங்கள் ஒன்று சேரணும் மருத்துவ உலகம் தலைத்தோங்கி நிக்கணும்' என்று கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நாம தப்பிக்கணும்

நாம தப்பிக்கணும்

இங்க உண்மையில் போர்தான் நடந்துக் கொண்டிருக்கிறது. எவன் பார்த்த வேலையோ? இப்படியொரு வேலை பாப்பாய்ங்களா? உசுருலாம் சாவணும், காரு, வீடு, வாசல், வண்டிலாம் அப்படியே இருக்குமாம்.. அப்படி ஒரு செட் அப் பண்ணி இருக்காய்ங்க. இதுல இருந்து நாம தப்பிக்கணும். இந்த உலக நாடுகள்லாம் குண்டு, கிண்டைலாம் புதைச்சிரணும்? அதெல்லாம் நமக்குத் தேவையில்ல.

ரோட்டைத் தாண்டி

ரோட்டைத் தாண்டி

மனித நேயங்கள் ஒன்னு சேரணும். மருத்துவ உலகம் தழைத்தோங்கி நிற்கணும். மருத்துவ உலகமே திணறுது. அவங்க சொல்வதை மட்டும் கேட்கணும். அவங்களாம் நமக்கு கடவுள். இப்ப இந்த வீட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது. நானும் வரகூடாது, அவனவன் வீட்டுல அவனவன் இருக்கணும்னுட்டான். அது கோடு, இது வீடு. இந்த ரோட்டைத் தாண்டியும் வரக் கூடாதுன்னுட்டாம்.

போச்சா.. போச்சா..

போச்சா.. போச்சா..

ரோட்டைத் தாண்டியும் வரக்கூடாது, வீட்டைத் தாண்டியும் வரக்கூடாது, கோட்டைத் தாண்டியும் வரக்கூடாது.. போச்சா.. போச்சா.. போச்சா.. என்னா சேட்டை? கேட்க மாட்டேங்குதுங்க பய புள்ளைங்க? புள்ளைலுக்கு இப்ப கொடுக்கிற பாடம் காலங்காலத்துக்கு மனசுல நிய்க்கும். பிள்ளைகளை வளர்க்க நமக்கு நல்ல சந்தர்ப்பம்.

சரியான சந்தர்ப்பம்

சரியான சந்தர்ப்பம்

இதை பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கணும், வெளியில பூச்சி இருக்கு. கைய சுத்தம் பண்ணிக்கணும்பான்னு சொல்லிக்கொடுக்கணும். அதுக்கு சரியான சந்தர்ப்பத்தை கடவுள் கொடுத்திருக்கான்' எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பல ரசிகர்கள், அடிக்கடி இப்படி வீடியோ போடுங்க என்று அவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X