உதயநிதி படத்துல வடிவேலு கேரக்டர்... 2வது ரவுண்டை சிறப்பாக துவக்கிய வைகைப்புயல்!
சென்னை : நடிகர் வடிவேலு தற்போது தன்னுடைய இரண்டாவது ரவுண்டை கோலிவுட்டில் துவக்கியுள்ளார். தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து உதயநிதி படத்தில் சிறப்பான கேரக்டரில் நடித்து வருகிறார் வைகைப்புயல்.

வைகைப்புயல் வடிவேலு
வைகைப்புயல் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் வடிவேலு. ஆரம்பத்தில் சிறிய கேரக்டர்களில் நடித்துவந்த இவர், தொடர்ந்து அனைவராலும் விரும்பப்படும் நடிகராக மாறினார். ஹீரோக்களுக்கு இணையான கேரக்டர்களில் நடித்து மிகச்சிறந்த காமெடி நடிகராக உருவானார்.

நாயகனாக வடிவேலு
தொடர்ந்து இம்சை அரசன் 23ம் புலிகேலி உள்ளிட்ட படங்களில் நாயகனாகவும் நடித்திருந்தார். இந்தப் படங்கள் இவரது கேரியரில் மிகச்சிறந்த மைல்கல்லாக அமைந்தன. தொடர்ந்து சிறப்பான கதைக்களங்களில் தன்னுடைய கேரக்டர் மட்டுமில்லாமல் தன்னுடன் பணியாற்றிய அனைத்து கேரக்டர்களுக்கும் பெயர் சேர்க்கும்வகையில் இவரது நடிப்பு அமைந்தது.

பெரிய மெனக்கெடல்கள்
நளினி உள்ளிட்ட பெரிய ஹீரோயின்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் தனது படங்களில் ஏற்படுத்தினார். தன்னுடைய கேரக்டர் டெவலப்மென்ட்டிற்காக இவர் மிகப்பெரிய மெனக்கெடல்களை வெளிப்படுத்துவார் என்று பலர் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடிகை தாரணிகூட இவரது இத்தகைய மெனக்கெடலை பாராட்டி பேட்டி கொடுத்திருந்தார்.

மீண்டும் படங்கள்
இடையில் சில காலங்கள் தனது நடிப்பிற்கு இடைவெளி விட்டிருந்த வடிவேலு தற்போது மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கியுள்ளார். தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நாயகனாக தன்னுடைய பயணத்தை துவக்கியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது.

உதயநிதியுடன் வடிவேலு
இதனிடையே உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிவரும் படத்தில் வடிவேலு கமிட்டாகி நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த மாதம் 4ம் தேதி துவங்கி தறபோது முதல்கட்ட சூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடித்து வருகிறாராம்.

அரசியல்வாதியாக வடிவேலு
இதில் மற்றொரு சுவையான செய்தி என்னவென்றால், படத்தில் மாமன்னன் என்ற கேரக்டரில் இவர் நடித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தின் பெயர் மாமன்னன் என்று இருக்கும்போது, அந்த கேரக்டரில் வடிவேலு நடித்து வருவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


Click it and Unblock the Notifications











