நெட்பிளிக்சின் அடுத்த அடிஷன்.. வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உரிமையையும் கைப்பற்றியது!
சென்னை : நீண்ட காலங்களுக்கு பிறகு நடிகர் வடிவேலு மீண்டும் படங்களில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார்.
நடிகர் வடிவேலு நாயகனாக நடித்துவரும் காமெடி படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இந்தப் படத்தில் நாய் ஒன்று முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறது.
இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவரும் நிலையில், இயக்குநர் சுராஜ் இயக்கி வருகிறார்.

நடிகர் வடிவேலு
நடிகர் வடிவேலு 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நாயகனாக நடித்துவரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வருகிறது. துப்பறியும் நிபுணராக வடிவேலு இந்தப் படத்தில் நடித்துள்ளார். காமெடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம்
சென்னை, மைசூரு என இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து நடைபெற்ற நிலையில், தற்போது படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. படத்தில் நடன இயக்குநராக நடன இயக்குநரும் பிரபல நடிகருமான பிரபு தேவா இணைந்துள்ள நிலையில், சமீபத்தில் படத்தின் பாடல் சூட்டிங் நடைபெற்று படத்தின் சூட்டிங் முற்றிலுமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நெட்பிளிக்ஸ் கைப்பற்றிய ஓடிடி உரிமம்
இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், நீண்ட நாட்களாக திரையில் வடிவேலுவை காணாமல் இருந்த ரசிகர்களின் ஏக்கம் நிவர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே படத்தின் ஓடிடி உரிமையை தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

திரையரங்க ரிலீசுக்கு பின் ஓடிடியில் வெளியீடு
லைகா நிறுவன தயாரிப்புகளின் ஓடிடி உரிமைகளை தொடர்ந்து நெட்பிளிக்ஸ் வாங்கிவரும் சூழலில் தற்போது அதில் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படமும் இணைந்துள்ளது. திரையரங்குகளில் ரிலீசான பின்பு ஓடிடியில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்
நடிகர் வடிவேலு சில காலங்கள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். அவரது வரவிற்காகவே காத்திருந்தது போல அடுத்தடுத்து அவரை தயாரிப்பாளர்கள் கமிட் செய்து வருகின்றனர். தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை தொடர்ந்து சந்திரமுகி 2, மாமன்னன் படங்களிலும் நடித்து வருகிறார் வடிவேலு.


Click it and Unblock the Notifications











