வடிவேலு கலக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்... பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

சென்னை : காமெடி நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் களமிறங்கியுள்ள படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.

இந்தப் படத்தை இயக்குநர் சுராஜ் டைரக்ட் செய்யவுள்ளார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம்

நடிகர் வடிவேலு தன்மீதான பிரச்சினைகளை அனைத்தையும் தீர்த்துவிட்டு தற்போது கதை விவாதங்களில் பங்கேற்று வருகிறார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்புகளிலும் அவர் இணையவுள்ளார். இதில் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் முதலில் உருவாகவுள்ளது.

ஹீரோவாக களமிறங்கிய வடிவேலு

ஹீரோவாக களமிறங்கிய வடிவேலு

முதலில் நாயகனாகவும் பின்பு மற்ற படங்களில் காமெடியனாகவும் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் வடிவேலு, இதையொட்டி சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். இதில் அவருக்கு ஜோடியில்லை என்றாலும் முன்னணி நடிகை ஒருவர் படத்தில் உள்ளதாகவும் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நாய் சேகர் பெயர்

நாய் சேகர் பெயர்

இந்தப் படத்திற்கு முதலில் நாய் சேகர் என்றே பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏஜிஎஸ் நிறுவனம் இந்த தலைப்பில் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு பர்ஸ்ட் லுக்கையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளதால் வடிவேலு படத்திற்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாய்களுடன் வடிவேலு காணப்படுகிறார். அவரது லுக்கும் சிறப்பாக அமைந்துள்ளது. போஸ்டரில் கையில் நாய் சங்கிலியை பிடித்தபடி கோட் சூட்டுடன் கலக்கலாக அமர்ந்துள்ளார் வடிவேலு. மொத்தத்தில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை இந்தப் போஸ்டர் உருவாக்கியுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசை

சந்தோஷ் நாராயணன் இசை

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை விரைவில் தயாரித்து ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது. வடிவேலு படத்தில் நாய் சேகர் என்ற கேரக்டர் மிகவும் முக்கியமானது. அந்த வகையில் அந்த தலைப்புடன் இந்தப் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 மீண்டும் படங்களில் கவனம்

மீண்டும் படங்களில் கவனம்

வடிவேலு காமெடியை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இப்போது வரை அவரது காமெடியே தமிழ் சினிமாவில் பிரதானமாக உள்ளது. இந்நிலையில் அவர் சில காரணங்களால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் படங்களில் கவனம் செலுத்தி வருவது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X