வடிவேலு பாடிய 2 பாடல்கள்.. ரிலீசுக்கு தயாராகும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம்.. சூப்பர் அப்டேட் இதோ!
சென்னை : நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.
Recommended Video
சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த மாதமே நிறைவடைந்தது.
இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிட்ட வண்ணம் உள்ளது.

நடிகர் வடிவேலு
நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவின் காமெடி கிங்காக ரசிகர்களால் போற்றப்படுபவர். இவரது பல படங்கள் பெரிய பட்ஜெட் படங்களுக்கே சவால் விடும் வகையில் அமைந்தவை. தொடர்ந்து படங்களில் சிறப்பாக நடித்துவந்த வடிவேலு, இடையில் சில ஆண்டுகள் நடிப்பிலிருந்து விலகியிருந்தார்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம்
இந்நிலையில் தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற காமெடி படத்தின்மூலம் கோலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஜூன் மாதத்திலேயே நிறைவடைந்தது. இதையடுத்து படக்குழுவினர் புகைப்படங்களையும் வெளியிட்டனர்.

2 பாடல்களை பாடிய வடிவேலு
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துவரும் இந்தப் படத்தில் அவரது இசையில் வடிவேலு இரண்டு பாடல்களை பாடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் பாடல்களின் ஒன்றிற்கு பிரபல நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.

பாடல் வெளியீடு
இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி வைரலான நிலையில், தற்போது படத்தின் அப்டேட்டையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் வடிவேலு பாடிய பாடல் விரைவில் ரிலீசாக உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் இந்தப் பாடல் வெளியாகவுள்ளது.

ஸ்டைல் லுக்
நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்க உள்ளார் வடிவேலு. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியான நிலையில், அதில் சிறப்பான லுக்கில் காணப்பட்டார். அதில் நாய்களை பிணைத்திருந்த சங்கிலியை கையில் பிடித்தபடி சிறப்பான போஸ் கொடுத்திருந்தார். மிகவும் ஸ்டைலாகவும் இருந்தார்.

அடுத்தடுத்த படங்கள்
இந்தப் படத்தில் காமெடி நாயகனாக வடிவேலு களமிறங்கியுள்ளார். தொடர்ந்து உதயநிதியின் மாமன்னன் படத்தில் இணைந்துள்ளார். இதில் மாமன்னன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களிலும் வடிவேலு கமிட்டாகியுள்ளார்.


Click it and Unblock the Notifications











