Don't Miss!
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Automobiles
2-3 லட்ச ரூபா டவுண்பேமென்டிலேயே இந்த எஸ்யூவி கார்களை வாங்கிடலாம்! நம்பவே முடியல.. இந்த காரைகூட வாங்க முடியுமா?
- Sports
முகமது சிராஜை ஏமாற்றுகிறாரா ரோகித்.. நன்றாக ஆடியும் அங்கீகாரம் இல்லை.. மஞ்ச்ரேக்கர் குற்றச்சாட்டு
- News
"ரெக்கார்டு".. 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து.. சாதனை செய்த கோவை பெண்.. சபாஷ்
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- Lifestyle
இத யூஸ் பண்ணி நீங்க சுயஇன்பம் செய்றீங்களா? அது ஆபத்தானதாம்... பின்ன எப்படி செய்யுனும் தெரியுமா?
- Finance
பெண்கள் ஐபிஎல்.. 4670 கோடி கல்லாகட்டிய BCCI.. இங்கேயும் அம்பானி, அதானி..!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
சந்திரமுகி 2 படம் உருவாக வடிவேலுதான் காரணமாமே.. அவரே சொன்ன தகவல்!
சென்னை : நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் தற்போது சந்திரமுகி 2 படம் உருவாகியுள்ளது.
பி வாசு இயக்கத்தில் மைசூருவில் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் பிரம்மாண்ட அரண்மனை செட் போடப்பட்டு நடைபெற்று வருகிறது
முதல் பாகத்தில் தான் ஏற்று நடித்த அதே கேரக்டரில் நடிகர் வடிவேலு இந்தப் படத்திலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ரஜினிக்கே
வினை
வைக்கும்
ராகவா
லாரன்ஸ்…
ஜெயிலர்
படத்தை
கார்னர்
செய்யும்
சந்திரமுகி
2?

சந்திரமுகி 2 படம்
நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியான சந்திரமுகி படம் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் குவித்த படம். ரஜினி மட்டுமில்லாமல் படத்தின் அனைத்து நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களுக்கும் இந்தப் படம் சிறப்பாக கைக்கொடுத்தது. இந்நிலையில் ஏறக்குறைய 18 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.

விறுவிறு சூட்டிங்
இந்தப் படத்தை முந்தைய பாகத்தை இயக்கிய பி வாசுவே இயக்கி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் எளிமையான வகையில் பூஜை போடப்பட்டு இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டது. மைசூரு அரண்மனையில் படத்தின் முதல்கட்ட சூட்டிங் துவங்கப்பட்டு நடத்தப்பட்டது. படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு உள்ளிட்டவர்கள் இந்த சூட்டிங்கில் கலந்துக் கொண்டனர்.

ஐதராபாத்தில் சூட்டிங்
தொடர்ந்து படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் பிரம்மாண்டமான அரண்மனை செட் போடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. முதல் பாகத்தில் ரஜினி ஏற்று நடித்த கேரக்டரில் தற்போது லாரன்ஸ் நடித்து வருகிறார். படத்தின் நாயகி குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், படத்தில் தற்போது கங்கனா ரனாவத் நாயகியாக கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கங்கனா ரனாவத் நாயகி?
படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கதை மற்றும் கேரக்டர் குறித்து தகவல் அறிந்த கங்கனா, தானாகவே விருப்பப்பட்டு பி வாசுவிடம் இந்தக் கேரக்டரில் நடிக்க விருப்பம் தெரிவித்து கேட்டு வாங்கிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படம் உருவாக வடிவேலு காரணம்
இதனிடையே இந்தப் படம் உருவாக தான்தான் காரணம் என்று நடிகர் வடிவேலு தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின்மூலம் கம்பேக் கொடுத்துள்ள வடிவேலு, படத்தின் பிரமோஷன்களில் அடுத்தடுத்து ஈடுபட்டு வருகிறார். அவ்வாறு ஒரு பேட்டியில் பேசிய வடிவேலு, இந்தப் படத்திற்காக லைகா மற்றும் பி வாசு இருவரிடமும் அடுத்தடுத்து பேசி சம்மதம் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

இருதரப்பிலும் பேசி சம்மதம்
முதலில் இந்தப் படம் குறித்து லைகாவிடம் பேசியதாகவும், அவர்கள் பி வாசுவிடம் கதை கேட்க அனுப்பியதாகவும் அவர் 5 மணிநேரம் தன்னிடம் கதையை விவரித்ததாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்தப் படத்தின் தயாரிப்பு குறித்து லைகாவிடம் பேசி இறுதி செய்ததாகவும் வடிவேலு தெரிவித்துள்ளார். இதையடுத்தே படம் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்ததாகவும் வடிவேலு தெரிவித்துள்ளார்.