வடிவேலுவிற்கு மோதிரம் மாட்டிய இசைஞானி... சிறப்பான படத்தை வெளியிட்ட வைகைப்புயல்
சென்னை : வைகைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் காமெடி நடிகர் வடிவேலு.
கடந்த காலத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை என்று கூறுமளவிற்கு அதிகமான படங்களில் இவர் நடித்தார்.
தற்போது மீண்டும் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ள இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இளையராஜாவுடன் இருக்கும் பழைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

முன்னணி காமெடி நடிகர்
வைகைப்புயல் வடிவேலு சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கி தொடர்ந்து கோலிவுட்டின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உருமாறினார். ஒரு காலகட்டத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை என்னுமளவிற்கு இருந்தது. முன்னணி நடிகர்கள் அனைவருடனும் சேர்ந்து நடித்தார்.

சிறப்பான காமெடி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் வடிவேலு இணைந்து நடித்த சந்திரமுகி படத்தில் இவர் செய்த காமெடி கலாட்டாக்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக மாப்பு வைச்சிட்டாண்டா ஆப்பு என்ற காமெடி சிறப்பாக அமைந்தது.

இணையத்தில் கலக்கல்
மேலும் சிறிது காலம் நடிப்பதில் இருந்து வடிவேலு விலகினாலும் அவரது காமெடிகள் மீம்களாக தற்போதும் இணையத்தை கலக்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு தான் மீண்டும் நடிக்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். ட்விட்டரில் இணைந்துள்ள வடிவேலு தொடர்ந்து பழைய நினைவுகளின் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

மோதிரம் மாட்டிய இசைஞானி
இதனிடையே தற்போது இளையராஜாவுடன் தான் இருக்கும் பழைய புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். அதில் இளையராஜா வடிவேலுவிற்கு மோதிரம் அணிவிக்கிறார். அதை தன்னுடைய ட்ரேட்மார்க் புன்னகை மற்றும் பெருமிதத்துடன் பெற்று கொள்கிறார் வடிவேலு.


Click it and Unblock the Notifications











