கடவுள் இறங்கிட்டான்.. அந்த சோதனையில் பாஸ் ஆகணும்.. வடிவேலு போட்ட திடீர் வீடியோ!

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு மக்களுக்கு கடவுள் கொடுத்த சோதனை என நடிகர் வடிவேலு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Recommended Video

Latest Full Video: Vadivelu advice | போலிஸ் சொல்லுறத கேளுங்க

தமிழ் சினிமாவின் காமெடி சக்கரவர்த்தியாகவும், மீம் க்ரியேட்டர்களின் மூலதனமாகவும் விளங்குகிறார் நடிகர் வடிவேலு.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சமூக வலைதளம் வந்திருக்கும் நடிகர் வடிவேலு, தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

கொரோனா பாடல்

கொரோனா பாடல்

இந்த புதிய ட்விட்டர் கணக்கு நடிகர் வடிவேலு உடையது தானா இல்லை ஃபேக் அக்கவுண்ட்டா என்ற சந்தேகம் ஆரம்பத்தில் அனைவருக்கும் எழுந்தது. ஆனால், தொடர்ந்து, நடிகர் வடிவேலு புதிய புதிய பதிவுகளை அதில் பதிவிட, அதிகாரப்பூர்வ பக்கம் என்பது தெரிய வந்தது. கொரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்த கொரோனா பாடல் ஒன்றை சமீபத்தில் பாடி டிரெண்ட் செய்திருந்தார் வடிவேலு.

வீட்டிலேயே இருங்க

வீட்டிலேயே இருங்க

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. மருத்துவர்கள் நமது நலன் காக்க போராடி வருகின்றனர். லீவு விட்டாச்சுன்னு வெளியே சுத்தாம அனைவரும் வீட்டிலேயே இருங்க என்றும் விழிப்புணர்வு கருத்துக்களை அண்மையில் தெரிவித்த நடிகர் வடிவேலு, தொடர்ந்து கொரோனா குறித்த பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

கடவுள் இறங்கிட்டான்

கடவுள் இறங்கிட்டான்

இந்நிலையில், தற்போது நடிகர் வடிவேலு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், கடவுள் இறங்கிட்டார் என்றும், இயற்கைக்கு எதிராக ஆட்டம் போட்ட மனிதர்களுக்கு சோதனை கொடுக்கும் விதமாக கடவுள் இந்த நாடகத்தை அரங்கேற்றி வருகிறார் என்றும் இந்த சோதனையை கடவுளை வணங்கி மனிதர்கள் கடக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

போலீஸ் அடி

போலீஸ் அடி

மக்கள் நலனுக்காகத்தான் அல்லும் பகலும், ஓய்வின்றி காவல் துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், தேவையில்லாமல், வெளியே சுற்றி அவர்களிடம் அடிவாங்க தேவையில்லை என்றும் அந்த வீடியோவில் வடிவேலு கூறியுள்ளார். மேலும், தனது பாணியில் முதுகில் தட்டு வைத்துக் கொண்டு தப்புவது போல எல்லாம் தப்ப முடியாது. போலீஸ்காரர்களுக்கு எல்லாம் தெரியும், தட்டை எடுத்துட்டு அடிப்பாங்க எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X