Actor Vadivelu: எம்ஜிஆரின் தீவிர ரசிகன்.. கலைஞரின் தீவிர பக்தன்.. வடிவேலு கூல் பேச்சு!
சென்னை: நடிகர் வடிவேலு பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் காமெடியனாக, குணச்சித்திர கேரக்டர்களில் சிறப்பான நடிப்பை கொடுத்து வருகிறார். காமெடிக்கு என்று தனியாக பாதையை தேர்ந்தெடுத்து அதன்மூலம் ஏராளமான படங்களில் நடித்துள்ள வடிவேலு, பல படங்களின் வெற்றிக்கும் காரணமாக அமைந்துள்ளார். இடையில் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2, மாமன்னன் உள்ளிட்ட படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்தப் படங்களில் மாமன்னன் படத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்து மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் உணர்ச்சிப்பூர்வமான வடிவேலுவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. படத்தின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதையும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெற்றிருந்தார். இந்த விருது நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு, படத்தில் அழவைத்து அவார்டும் கொடுத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

நடிகர் வடிவேலு: நடிகர் வடிவேலு அடுத்தடுத்த தன்னுடைய காமெடி படங்களால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். பல படங்கள் வடிவேலு காமெடிக்காக வெற்றிப் படங்களாக மாறிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளனர். சில ஆண்டு காலங்கள் சினிமாவில் நடிக்காமல் விலகியிருந்த வடிவேலு தற்போது மீண்டும் தன்னுடைய திரைவாழ்க்கை பயணத்தை துவங்கியுள்ளார். அடுத்தடுத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி, மாமன்ன என வடிவேலு நடிப்பில் படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இதில் மற்ற இரு படங்களும் வடிவேலுவின் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியான நிலையில் மாமன்னன் படத்தில் வடிவேலுவின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை பார்க்க முடிந்தது.
வடிவேலுவின் மாமன்னன் படம்: மாமன்னன் படம் உதயநிதியின் நடிப்பில் இறுதியாக வந்த படம். படத்தில் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் உதயநிதியின் அப்பாவாக நடித்திருந்தார் வடிவேலு. இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றுத் தந்தது. அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துவரும் வடிவேலு, பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் சென்னை பெரம்பூரில் நடைபெற்ற முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார் நடிகர் வடிவேலு.
கலைஞரின் தீவிர பக்தன்: தான் முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிஆரின் தீவிர ரசிகன் என்று இந்த பேச்சின்போது குறிப்பிட்ட வடிவேலு, ஆனால் முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் தீவிர பக்தன், தீவிர விசுவாசி என்றும் கூறினார். எம்ஜிஆரை வெளியில் இருந்துதான் தான் பார்த்துள்ளதாகவும் ஆனால் கலைஞர் கதை வசனத்தில் நடித்துள்ளதாகவும் அவருடன் அமர்ந்து பேசியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் தனக்கு நிறைய விஷயங்களில் தைரியம் சொல்வார் என்றும் கூறியுள்ளார். கலைஞர் திரையுலகத்தை அதிகமாக நேசித்ததை சுட்டிக் காட்டிய வடிவேலு, தனது 23ம் புலிகேலி படத்தின் ரிலீசில் ஏற்பட்ட பிரச்சினையை அவர் தீர்த்து வைத்ததையும் நினைவு கூர்ந்துள்ளார்.
கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி: இதனிடையே சென்னை மெரினாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தையும் கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தையும் வடிவேலு பார்வையிட்டுள்ளார். மேலும் நினைவிடத்தில் அவர் மலர்த்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் மணிமண்டபத்தில் தான் ஒன்றரை மணிநேரம் சுற்றிப் பார்த்ததாகவும் அது சமாதி அல்ல சன்னிதி என்றும் தெரிவித்துள்ளார். இங்கு கலைஞர் பட்ட துன்பங்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதை எல்லா மக்களும் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். முன்னதாக ஏஐ கலைஞருடன் அவர் பேசினார்.


Click it and Unblock the Notifications











