தன்னை பிரதியெடுத்த வடிவேல் பாலாஜி மறைவு.. நடிகர் வடிவேலு அதிர்ச்சி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
சென்னை: நடிகர் வடிவேல் பாலாஜி மறைவுக்கு நடிகர் வடிவேலு அவரது குடும்பத்தின் சார்பாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
பாலாஜியாக இருந்த அவர், வைகைப் புயல் வடிவேலுவின் காமெடிகளால் ஈர்க்கப்பட்டார். அவரது காமெடிகளை பார்த்து பார்த்து ரசித்த பாலாஜிக்குள் அவரை அறியாமலேயே வடிவேலுவின் உடல் மொழி புகுந்தது.

ஒட்டிகொண்ட வடிவேலு
விஜய் டிவியின் பல காமெடி நிகழ்ச்சிகளில் வடிவேலு போன்றே தோன்றுவார் பாலாஜி. நடை, உடை, உடல் மொழி, டயலாக் டெலிவரி என மற்றொரு வடிவேலு போன்றே வருவார். இதனாலேயே அவரது பெயருக்கு முன்னால் வடிவேல் ஒட்டிக்கொள்ள வடிவேல் பாலாஜி ஆனார்.

வடிவேலு அதிர்ச்சி
தனது தீவிர ரசிகரான, தன்னை பிரதியெடுத்து மக்களை சிரிக்க வைத்து வந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் மறைவு குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார் நடிகர் வடிவேல். இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நடிகர் வடிவேலு இவ்வளவு இளம் வயதில் ஒரு மனிதர் இறப்பதெல்லாம் கொடுமை என கூறியுள்ளார்.

150 பேரின் சார்பாக
தான் பாலாஜியின் மிகப்பெரிய ரசிகன் என்றும் கூறியுள்ளார் வடிவேல். மேலும் தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த 150 பேரின் சார்பாக வடிவேல் பாலாஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் வடிவேலு.

அரசு மருத்துவமனை
நடிகர் வடிவேல் பாலாஜி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாததால் நேற்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Recommended Video

உயிர் பிரிந்தது
ஆனால் நேற்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர்பிரிந்தது. மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜிக்கு ஜோதிலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











