'வைரஸாய் வந்தே பாடம் புகட்டிவிட்டாய்..இத்தோடு விட்டுவிடு..' வைகைப்புயல் வடிவேலு பாடிய கொரோனா சாங்!
சென்னை: கொரோனாவுக்காக வடிவேலு பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
பிரபல காமெடி நடிகர் வடிவேலு. கடைசியாக, விஜய்யின் மெர்சல் படத்தில் நடித்திருந்தார்.
'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் திரையுலகிலிருந்து விலகி இருக்கிறார்.

காமெடி காட்சி
இந்த ஊரடங்கு நேரத்தில் இவரது காமெடிதான் மக்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. காமெடி சேனல்களில் இவரது காமெடி காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை என்பதால் அவர்களும் தொடர்ந்து ஒளிபரப்புகிறார்கள். ரசிகர்களும் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் இவரது காமெடி காட்சிகள்தான் மூளையாக இருக்கிறது.

மீம்ஸ் கிரியேட்டர்ஸ்
அவரது காமெடியை, அக்குவேறு ஆணி வேறாக பிரித்து மீம்ஸ் கிரியேட்டர்ஸ் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா, உலகம் முழுவதும் மனிதர்களை இரக்கமின்றி கொன்று வருகிறது. சீனாவில் உருவான இந்த வைரஸ், மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி இருக்கிறது. இந்த வைரஸ், இப்போது இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு
அமெரிக்காவில் இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. அங்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதை தடுக்க உலக நாடுகள் தீவிரமாக போராடி வருகின்றன. இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கொரொனா விழிப்புணர்வு வீடியோக்களை நடிகர், நடிகைகள் வெளியிட்டுள்ளனர்.
கொரோனா பாடல்
நடிகர் வடிவேலுவும் கடந்த சில நாட்களுக்கு முன் உருக்கமான, கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார். இது பரபரப்பானது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாடல் ஒன்றை வடிவேலு பாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் ஆரவாரமாக கமென்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
வாழ்வைத் தொலைத்தோம்
'காடுகளை அழித்தோம், மண்வளம் கெடுத்தோம், நீர்வளம் முடித்தோம், நம் வாழ்க்கையைத் தொலைத்தோம். வைரஸாய் வந்தே நீ.. பாடம் புகட்டிவிட்டாய், இயற்கையை மதிக்கின்றோம், இத்தோடு விட்டுவிடு' என்று முடிகிறது அந்த பாடல். அதற்கு சில ரசிகர்கள், 'என் தலைவனையே கண்கலங்க வச்சிடுச்சே, இந்த கொரோனா' என்றும் 'இந்த ஊரடங்குக்கு என் தலைவன் மட்டும் இல்லைனா நாறி போயிடும் நாறி' என்றும் கமென்ட் அடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











