Just In
- 19 min ago
பிக்பாஸ் நட்சத்திரங்களுடன் இணைந்த பிரபல இயக்குநர்.. மிரட்டலாக தயாராகும் 3.33!
- 1 hr ago
அர்ச்சனாவின் அதிரடி போஸ்ட்.. "போடாதே போடாதே"... பதறிப் போன மகள் சாரா!
- 1 hr ago
இது என்ன.. இப்படியும் இல்ல அப்படியும் இல்ல.. யாஷிகாவின் டிரெஸ்ஸால் தலைசுற்றிப்போன நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
சித்துவை நெனச்சு நெனச்சு.. விடிய விடிய போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்.. செம வைரல்
Don't Miss!
- Finance
சாமனியர்களுக்காக ஒலித்த குரல்.. தமிழகத்தின் தோழர் தா.பாண்டியன்.. பெரும் இழப்பு..!
- Automobiles
கண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட்!! ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...
- News
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வீடு வீடாக விஜயம் செய்யும் "ஜாக்பாட்".. ஆனந்தத்தில் மக்கள்
- Sports
பிட்ச் மீது குறை சொல்லாதீர்கள்... பேட்ஸ்மேன்களின் மனசாட்சிக்கு தெரியும்... கெவின் விளாசிய பீட்டர்சன்
- Lifestyle
பெண்கள் ஆயுள்முழுவதும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு எதை எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நான் 10 வருஷமா லாக்டவுன்லதான் இருக்கேன்.. வாய்ப்பில்லாமல் கண்ணீர்விட்ட வடிவேலு..கலங்கும் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் வடிவேலு தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லாதது குறித்து பேசி கண்ணீர்விட்டது ரசிகர்களையும் கலங்க வைத்துள்ளது.
என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகர் வடிவேலு.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சத்தை தூக்கிட்டு ஓடினாரா காஞ்சனா நடிகை? பரபரக்கும் ரசிகர்கள்!
தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்தார் வடிவேலு.

காமெடி உலகில் அரசன்
மற்றவர்களை காயப்படுத்தாமல் தன்னைத்தானே டேமேஜ் செய்துக்கொண்டு ரசிகர்களை சிரிக்க வைப்பதில் வடிவேலுவுக்கு நிகர் வடிவேலுதான். இதனாலேயே இன்றும் தமிழ் சினிமாவின் காமெடி உலகில் இன்றும் அரசனாக வலம் வருகிறார்.

பெரும் வேதனைதான்
இந்நிலையில் கடந்த சில ஆண்டுளாக சினிமாவில் வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார். எந்த படங்களிலும் அவரை பார்க்க முடியாமல் இருப்பது ரசிகர்களுக்கு பெரும் வேதனைதான். இந்நிலையில் நடிகர் வடிவேலு நிகழ்ச்சி ஒன்றில் வேதனையுடன் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

வஞ்சத்தில் வீழ்ந்தாயடா..
அதாவது, திரையுலகினர் உள்ள நண்பேண்டா வாட்ஸ்அப் குரூப்பினருக்கான கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற வடிவேலு, பாடகர் முகேஷுடன் இணைந்து செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என்ற கர்ணன் படத்தில் இடம்பெற்ற பாடலை பாடினார்.

பெரும் வேதனை..
தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு, நடிக்க உடம்பில் தெம்பு இருந்தும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது பெரும் வேதனை என்று கண் கலங்கினார். மேலும் நீங்கள் எல்லாம் ஒரு வருடமாக தான் லாக்டவுனில் இருந்தீர்கள்.

10 வருடங்களாக லாக்டவுன்
ஆனால் நான் 10 வருடங்களாக லாக்டவுனில்தான் இருக்கிறேன் என்றும் வாய்ப்பில்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது எவ்வளவு வருத்தமாக இருக்கிறது தெரியுமா என்றும் வேதனையுடன் கூறினார். மேலும் நடிகர் வடிவேலு உடல் மெலிந்தும் காணப்பட்டார்.

மீண்டும் சூர்யாவுடன்
வடிவேலுவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் கலங்கி வருகின்றனர். கமலின் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சூர்யாவுடன் அவர் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.