வடிவேலு மருத்துவமனையில் அனுமதி... ரசிகர்கள் அதிர்ச்சி !

சென்னை : நகைச்சுவை நடிகர் வடிவேலு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

படப்பிடிப்புக்காக லண்டன் சென்று திரும்பிய வடிவேலுக்கு விமான நிலையத்தில் மேற்கொண்ட சோதனையில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடிவேலு

வடிவேலு

நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகனாக நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சுராஜ் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார் .

லண்டனில் படப்பிடிப்பு

லண்டனில் படப்பிடிப்பு

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இதையடுத்து, நடிகர் வடிவேலு, இயக்குனர் சுராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் படத்தின் பாடல் கம்போசிங்கிற்காகவும், படத்தின் சில காட்சிகளை லண்டனில் படமாக்குவதற்காக லண்டன் சென்றிருந்தனர்.

கொரோனா உறுதி

கொரோனா உறுதி

லண்டனில் இருந்து திரும்பிய நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா உறுதியாகி அவருக்கு எஸ் ஜீன் மாற்றங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தற்போது அவர், சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

ஓமிக்ரானா?

ஓமிக்ரானா?

விமான நிலையத்தில் வழக்கமான கொரோனா சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. வடிவேலுக்கு ஒமிக்ரான் ஆரம்ப அறிகுறி சந்தேகத்தின்பேரில் பரிசோதனை நடந்து வருவதாகவும் மருத்துவ பரிசோதனைக்கு பின்பே உறுதியாக தெரியவரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

அண்மையில் நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் தற்போது வடிவேலுவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X