நலமாக இருக்கிறேன்… முதல்வருக்கு நன்றி… நடிகர் வடிவேலு பேட்டி !

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேல் முழுமையாகக் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து தற்போது வீடு திரும்பியுள்ளார்.

Recommended Video

'மக்களே.. மாஸ்க் போடுங்க ப்ளீஸ்'… அட்வைஸ் செய்த நடிகர் வடிவேலு!

நாய் சேகர் ரிட்டன்ஸ் படப்பிடிப்புக்காக லண்டன் சென்ற வடிவேலு கடந்த 24 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வடிவேலு தற்போது குணமடைந்துள்ளதார், மக்கள் ஆசீர்வாதத்தால் குணமடைந்துள்ளதாக ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

நாய் சேகர் ரிட்டன்ஸ்

நாய் சேகர் ரிட்டன்ஸ்

நீண்டு ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு தற்போது, இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய நடிகர் வடிவேலுக்கு லேசான சளி, இருமல் இருந்ததால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளார்.

மக்களின் அன்பு

மக்களின் அன்பு

இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நான்எத்தனையோ தடைகளைத் தாண்டி மீண்டு வந்துள்ளேன் அவை அனைத்திற்கும் காரணம், மக்களாகிய உங்களின் அன்பும் ஆதரவு தான் என்றார். நான் நலம்பெறவேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி என்று கூறினார் வடிவேலு.

நலமாக இருக்கிறேன்

நலமாக இருக்கிறேன்

படப்பிடிப்புக்காக லண்டன் சென்றேன். நான் ஏற்கனவே இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டேன், மூன்றாவதாகவும் லண்டனில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.லண்டனில் இருக்கும் வரை எனக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை. இந்தியா வந்ததும் விமானநிலையத்தில் மேற்கொண்ட சோதனையில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளேன் என்றார்.

முதல்வருக்கு நன்றி

முதல்வருக்கு நன்றி

மேலும், பேசிய வடிவேலு, தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அதுக்கும் பயப்படாதீங்க எல்லாம் சரியாகிவிடும் என்றார். அது மனதிற்கு பலத்தை அளித்தது தமிழக முதலமைச்சருக்கு நன்றி என்றார். மேலும் மருத்துவர்களும் என்னை நன்றாக கவனித்துக்கொண்டார்கள் என்றார்.

புத்திசாலிகள்

புத்திசாலிகள்

மீம்ஸ் கிரியேட்டர்கள் பற்றி பேசிய வடிவேலு, கொரோனாவால் நான் பாதிக்கப்பட்டவுடன், படத்தில் நான் பேசிய வசனத்தை வைத்தே கொரோனாவை விரட்டிவிட்டார்கள் உண்மையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் புத்திசாலிகள் என்று அந்த போட்டியில் கூறினார் வடிவேலு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X