twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாடி எந்திருச்சிருச்சு.. தேவர் மகன் அனுபவம்.. வடிவேலு கூறக் கூற.. விழுந்து சிரித்த அரங்கம்!

    |

    Recommended Video

    60 years of Kamal Hassan | Ungal Naan | Ilayaraja | Rajinikanth | Vadivelu Speech

    சென்னை: கமலின் உங்கள் நான் நிகழ்ச்சியில் பங்கேற்ற வடிவேலு கமலுடன் இணைந்து நடித்த அனுபவங்களை கூறி அரங்கை அதிர வைத்தார்.

    நடிகர் கமல்ஹாசன் தனது 5 வயதில் சினிமாவில் அறிமுகமானார். அண்மையில் தனது 65வது பிறந்தநாளை கொண்டாடினார் கமல். கமல்ஹாசன் திரைத்துறையில் கால்பதித்து 60 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

    இதனை கொண்டாடும் வகையில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் கமல் 60ன் உங்கள் நான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைத்துறையை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு கமலுடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

    ரசித்த பிரபலங்கள்

    ரசித்த பிரபலங்கள்

    அவர்களில் ஒருவராக நடிகர் வடிவேலுவும் கலந்து கொண்டு சிங்காரவேலன் மற்றும் தேவர் மகன் படத்தின் அனுபவங்கள் குறித்து பேசினார். அவரது பேச்சு பெரிதும் கவரப்பட்டது. விழாவுக்கு வந்திருந்த மொத்த பிரபலங்களும் வடிவேலுவின் பேச்சை கண்கொட்டாமல் கேட்டு ரசித்தனர்.

    பத்தரைமாத்துத் தங்கம்

    பத்தரைமாத்துத் தங்கம்

    வாயில் வரும் வார்த்தைக்கு ஏற்ப அவர் உடல் மொழியும் அசத்த கரகோஷத்தாலும் விசில் சத்தத்தாலும் அதிர்ந்தது அரங்கம். அவர் பேசியதாவது, பரமக்குடி தந்த பத்தரைமாத்துத் தங்கம் கமல். நான் தரையில் உட்கார்ந்து திரையில் கமலைப் பார்த்து ரசித்தவன். பிறகு, அவரை நேரில் சந்திக்கவும் அவருடன் படத்தில் நடிக்கவும் வாய்ப்புக் கிடைத்தது எனக்கு. அவருடன் இணைந்து நடித்த முதல் படம் சிங்கார வேலன்.

    பிஞ்சு வயசு

    பிஞ்சு வயசு

    அஞ்சு வயசு.. மன்னிச்சுக்கோங்க.. பிஞ்சு வயசு. எதுவுமே தெரியாமல் திரைத்துறைக்கு வந்தார். அம்மா அப்பாவை எப்படி அழைக்கவேண்டும், வணங்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். இன்னைக்கு 60 வருஷம்.. இவ்வளவு நீண்ட பயணம் இது.. பெரிய சாதனை.

    டபுள் மடங்கு வண்டி

    டபுள் மடங்கு வண்டி

    கமலுடன் சிங்காரவேலன் படத்தில் நடித்த போதுதான் எனக்கு தேவர் மகன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று கூறிய வடிவேலு தேவர் மகன் படத்தின் நடித்த அனுபவங்களை சுவாரசியமாக கமல் 60 மேடையில் பகிர்ந்து கொண்டார் நேஷனல் பர்மிட் என்று லாரி ஓடுறத பார்த்திருப்பீர்கள். அந்த வண்டியில், இருபது இருபத்தி இரண்டு சக்கரம் இருக்கும். கமல் அந்தமாதிரி வண்டி. அதைவிட டபுள் மடங்கு வண்டி, சிவாஜிகணேசன் ஐயா.

    பழைய டூவீலர்

    பழைய டூவீலர்

    ஏற்கெனவே கமலைப் பார்த்து வெடவெடன்னு ஆடிப் போச்சு உடம்பு. சிவாஜி ஐயாவைப் பாத்ததும் திரும்பவும் ஆடுது. இங்கே ஒரு டேங்கர் லாரி. இந்தப்பக்கம் ஒரு டேங்கர் லாரி. நடுவுல நான் ஒரு பழைய டூவீலர். தேவர்மகன் படத்தில் ஒரு சம்பவம் நடந்தது. படத்தில் சிவாஜி ஐயா இறந்து போகும் காட்சி அது. அந்த காட்சிக்கு முன்னாடி கமல் சார் என்னை அழைத்தார். காட்சிகளை விளக்கினார்.

    அழுவுறதில் போட்டி

    அழுவுறதில் போட்டி

    நல்ல சீன் நல்லா அழுதுருங்க என்றார். அவ்வளவுதான் எப்படி அழறோம்னு மட்டும் பாருங்க என்று உள்ளுக்குள்ளேயே நினைத்துக்கொண்டேன். சிவாஜி இறந்துவிட்டார். அவரின் கால்மாட்டில் நானும் சங்கிலிமுருகனும் உட்கார்ந்துகொண்டு கதறி அழுகிறோம். எனக்கும் சங்கிலிமுருகனுக்கும் நடிப்பதில் போட்டி. அடுத்து கமல் வருவார். அவரின் நடிப்புதான் நமக்குத் தெரியுமே.

    அடக்கி வாசிங்கடா..

    அடக்கி வாசிங்கடா..

    அதற்கு முன்பு எங்களுடைய கதறலைக் கேட்டு பாடியா இருந்த சிவாஜி ஐயா எழுந்துவிட்டார். ச்சீ என்னடா இது. கமலஹாசன் தானேடா எனக்கு மகன். நீங்க என்னவோ ரெட்டைப் புள்ளைங்க மாதிரி இப்படி அழுதுட்டிருக்கீங்க. கொஞ்சம் அடக்கிவாசிங்கடா. டேய் கமலா , கமல் சாரை சிவாஜி ஐயா அப்படித்தான் அழைப்பார், என்னடா இவனுங்க இப்படி கதறுகிறானுங்க என்றார் சிவாஜி ஐயா.

    வாயில திணிச்சுக்கோ

    வாயில திணிச்சுக்கோ

    அப்புறம் என்னை டேய் துண்டை எடுத்து வாயில திணிச்சுக்கோ என்றார் சிவாஜி ஐயா. நான் துண்டை எடுத்து வாயில் திணித்துக்கொண்டேன். எனக்காவது துண்டு, சங்கிலிமுருகனுக்கு வேட்டி. சத்தம் வரப்படாது என்றார் சிவாஜி ஐயா. அடடா... நடிக்கறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சுது கடைசியில இப்படி ஆகிப்போச்சேன்னு நினைச்சுக்கிட்டேன்.

    சீனையே காணோம்

    சீனையே காணோம்

    அப்புறம் கமல் சாருக்குகிட்ட எங்கள காமிச்சு வெள்ளையடிக்கிற மாதிரி ஏதோ சைகை செய்தார் சிவாஜி ஐயா. அப்புறம் படத்துல பாத்தாதான் தெரியுது நான் காலுகிட்ட உட்கார்ந்த சீனையே காணோம். தேவையில்லாமல் அந்த இடத்தில் நடித்து, அந்தக் காட்சியைக் கெடுக்க இருந்தோம் நானும் சங்கிலிமுருகனும்.

    இன்று வரை நிற்கிறது

    இன்று வரை நிற்கிறது

    ஒருநாள் கமலை அழைத்த சிவாஜி ஐயா, டேய் கமலா. இந்தப் பய வடிவேலு மதுரை பாஷையை நல்லாப் பேசுறாண்டா. நான் கூட அந்த அளவுக்குப் பேசல என்றார். பிறகு என்னை அழைத்து முத்தமிட்டார் சிவாஜி ஐயா. ஒரு காட்சியில், சிவாஜி ஐயாவையும் கமலையும் வைத்துக்கொண்டு, நடுவில் இருந்தபடி நீங்க ம்..னு ஒருவார்த்தை சொல்லுங்கய்யா நான் அவரு தலைய கொண்டுவர்றேன்னு ஒரு வசனம் பேசுவேன்.. அந்தக் காட்சியும் இன்று வரை நிற்கிறது.

    அய்யனாரை வேண்டிக்கிறேன்

    அய்யனாரை வேண்டிக்கிறேன்

    கமல் நீண்டகாலம் வாழவேண்டும். பரமக்குடிதான் எனக்கும் சொந்த ஊர். அங்கே இருக்கும் அய்யனாரை பிரார்த்தனை செய்து கொள்கிறேன். இவ்வாறு பேசினார் வடிவேலு. வடிவேலுவின் ஒவ்வொரு வார்த்தையும் அவர் உடல் மொழியும் ரசிக்கும்படியாக இருந்தது. கடந்த 2011 சட்டசபை தேர்தலுக்கு பிறகு நடிகர் வடிவேலுக்கு சொல்லிக்கொள்ளும்படியாக படம் ஏதும் இல்லை. பொது நிகழ்ச்சிகளிலும் அவர் அதிகம் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில் இந்த மேடையை அற்புதமாக பயன்படுத்திக் கொண்டார் வடிவேலு.

    English summary
    Actor Vadivelu used Kamal 60 stage very well. He shared his experience with Kamal and Sivaji ganesan in Devar Magan movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X