Vadivelu: மறைந்த அம்மாவை நினைத்து கண்கலங்கிய வடிவேலு.. விஜய் அரசியல் என்ட்ரி குறித்து ஷாக் கமெண்ட்!

சென்னை: நடிகர் வடிவேலு பல ஆண்டுகளாக சினிமாவில் சிறப்பான பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர். காமெடியனாக துவங்கிய இவரது பயணம், ஹீரோ, கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என பல்வேறு தளங்களில் மிகவும் சிறப்பாக அமைந்து வருகிறது. இடையில் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்தாலும் தொலைக்காட்சிகள் மற்றும் மீம்ஸ்களில் இவரை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வந்தனர். தற்போது தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை துவங்கியுள்ள வடிவேலு சந்திரமுகி, மாமன்னன், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என அடுத்தடுத்த படங்களில் அதகளம் செய்துள்ளார்.

குறிப்பாக மாமன்னன் படத்தில் கேரக்டர் ரோலில் நடித்திருந்த வடிவேலுவிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. காமெடி நடிகராக இருந்தாலும் இவருக்குள் இருக்கும் அழுத்தமான நடிப்பு இந்தப் படத்தில் வெளிப்பட்டுள்ளது. முன்னதாக பல படங்களில் இவருக்கு நடிக்க வாய்ப்பு இருந்தும் அவையெல்லாம் காமெடி என்ற திரைக்குள் மறைந்தே காணப்பட்டது. ஹீரோவாக நடித்திருந்தாலும் காமெடி ஹீரோவாகவே இவர் படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் மாமன்னன் படத்தில் வலி, வேதனை இவற்றையெல்லாம் வெளிப்படுத்தும் வகையில் இவரது நடிப்பு போற்றப்பட்டது.

Actor Vadivelu visits Rameswaram and comments on Vijays political entry

நடிகர் வடிவேலு: நடிகர் வடிவேலு மிகப்பெரிய போராட்டங்களுக்கிடையில் தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கியவர். காமெடியனாக சிறிய கேரக்டர்களில் நடித்து தொடர்ந்து ஹீரோக்களுக்கு இணையான கேரக்டர்களிலும் நடித்து தன்னை முன்னேற்றிக் கொண்ட வடிவேலு ஒரு கட்டத்தில் இம்சை அரசன் 23ம் புலிகேசி உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவே நடிததிருந்தார். ஆனால் இவையெல்லாம் காமெடி கேரக்டர்களாகவே அமைந்தன. சில காலங்கள் நடிப்பிலிருந்து விலகியிருந்த வடிவேலு தற்போது மீண்டும் தன்னுடைய ரீ என்ட்ரியை சினிமாவில் துவங்கியுள்ளார். நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி, மாமன்னன் என அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து மேலும் படங்களில் கமிட்டாகி வருகிறார்.

அம்மாவிற்காக மோட்ச தீபம்: கடந்த ஆண்டில் வடிவேலுவின் தாய் சரோஜினி தன்னுடைய 87வது வயதில் வயது முதிர்வு காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி காலமானார். இந்நிலையில் அவர் மறைந்து ஓராண்டு ஆனதையொட்டி இன்றைய தினம் ராமேஸ்வரத்தில் வடிவேலு மோட்ச தீபம் சாற்றினார். இதன்போது அவரையறியாமலேயே அவரது கண்கள் கண்ணீர் சிந்தியது. தொடர்ந்து சில தினங்கள் கண்ணீர் சிந்திய வடிவேலு, கண்ணீரை துடைத்தபடி மோட்ச தீபத்தை ஏற்றினார். இதை பார்த்தவர்களும் கண் கலங்கினார். இதையடுத்து ராமேஸ்வரம் கோயிலில் சாமி தரிசனம் செய்த வடிவேலு, அங்கு சாமி கும்பிட வந்த மற்ற பக்தர்களுடன் உற்சாகமாக கைக்கொடுத்து பேசினார்.

விஜய் அரசியல் என்ட்ரி குறித்து கமெண்ட்: அவரை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அவர்கள் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்ட வடிவேலு, தொடர்ந்து தன்னுடைய சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியில் வந்தார். அப்போது செய்தியாளர்களுடன் பேசிய அவர், தன்னுடைய அம்மாவின் முதலாண்டு நினைவையொட்டி மோட்ச தீபம் ஏற்ற வந்ததாக கூறினார். தொடர்ந்து அவரிடம் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வடிவேலு தன்னுடைய ஸ்டைலில் அவ்வளவுதான், வாங்க இங்கிட்டு.. போதும் என்று பதிலளித்தார்.

Actor Vadivelu visits Rameswaram and comments on Vijays political entry

வயது மூப்பால் காலமான தாய்: வடிவேலுவின் குடும்பத்தினர் மதுரையில் வசித்து வருகின்றனர். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஜனவரியில் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சில தினங்கள் சிகிச்சை பெற்றுவந்த வடிவேலுவின் அம்மா, சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். தன்னுடைய தாய் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த வடிவேலு, என்றும் என் நினைவில் அம்மா என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தது அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X