தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைய நடிகர் வடிவேலு வெயிட்டிங்....!
சென்னை: இன்று பாராளுமன்ற தேர்தல், மற்றும் தமிழக சட்டப் பேரவைக்கான 18 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் என்று எல்லாரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
நடிகர் வடிவேலு தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் முடிவுகளுக்காக ஐம் வெயிட்டிங்ன்னு காத்திருக்காராம். காரணம் என்னன்னு பார்த்தால் திமுக ஜெயித்தால் தமக்கான பிரச்சனை தீர்ந்துவிடும் என்கிற கணக்கு என்கிறார்கள்.

இம்சை அரசன் படத்தின் பிரச்சனையால் வடிவேலுவுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள்.இவரால் படத்தின் இயக்குநர் சிம்புதேவன்,தயாரிப்பாளர் ஷங்கர் இவர்களுக்கும் பெரும் தலைவலி.
பெரும் பஞ்சாயத்து செய்தும் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை.சீமான் வரைக்கும் போயும் வடிவேலுவின் கண்டிஷன்களுக்கு அளவில்லாமல் போனதாம். கோபத்தில் பாதியில் கிளம்பி வந்துட்டாராம் சீமான்.
இப்போ தமிழகசட்டப்பேரவைக்கான இடைத் தேர்தல் களங்களில் திமுக ஜெயிச்சுருச்சுன்னா, ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கும் பூச்சி முருகனை வச்சு இந்த பஞ்சாயத்தை முடிச்சுடலாம்னு ஒரு கணக்கு போட்டு வச்சு இருக்கார் வடிவேலுன்னு சொல்றாங்க.
இம்சை அரசன் படத்துக்கு வடிவேலு போடும் கண்டிஷனை தளர்த்திக்கிட்டாலே பிரச்சனை ஓரளவுக்கு சுமுகமாக முடிஞ்சுருமே...ஐயர் வரவரைக்கும் அமாவாசை காத்திருக்குமா...இது ஏன் வளர்ந்துவிட்ட நடிகர் வடிவேலுவுக்கு புரியலை?


Click it and Unblock the Notifications











