Actor Vijay: ஒண்ணுமே தெரியாதமாதிரி ஓரமா நிக்கிறானே.. விஜய்க்கு டவுட்டை கிளப்பிய வெங்கட் பிரபு!

சென்னை: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கோட் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்தப் படத்தின் ரிலீசுக்குத்தான் வெயிட்டிங். மங்காத்தா போன்ற ஒரு மாஸான படத்தை வெங்கட் பிரபு உருவாக்கியிருப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையின் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்தின் ட்ரெயிலர் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. படத்தில் மிகச்சிறப்பான பிஜிஎம்மை யுவன் பயன்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. சில தினங்களில் படத்தின் நான்காவது சிங்கிளும் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

vijay goat movie vaibhav

கோட் படம்: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா என அதிகமான நட்சத்திரப்பட்டாளத்தை வைத்து கோட் படத்தை உருவாக்கியுள்ளார் வெங்கட் பிரபு. இது வெங்கட் பிரபுவின் ஸ்டைல்தான் என்றபோதிலும் இந்தப் படத்திற்கு விஜய் எப்படி பொருந்துவார் என்பதை பார்க்க அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தப் படம் விஜய்யின் கடைசி படங்களில் ஒன்று என்பது அவர்களின் ஆவலுக்கு மற்றுமொரு காரணமாக அமைந்துள்ளது. சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள போதிலும் படத்தில் சென்டிமெண்டிற்கு குறைவிருக்காது என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

கோட் பட பிரமோஷன்கள்: படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில், மூன்றாவது விஜய்யும் படத்தில் இருப்பதாகவும் அது ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்பிரைசாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தில் சிவகார்த்திகேயன், திரிஷா, வெங்கட் பிரபு ஆகியோரும் கேமியோ ரோல்களில் நடித்துள்ளதும் படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், வெங்கட் பிரபு மற்றும் அவரது கேங், லைலா உள்ளிட்ட படக்குழுவினர் அடுத்தடுத்த பேட்டிகளின்மூலம் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டி வருகின்றனர்.

விஜய்க்கு டவுட்டை கிளப்பிய வெங்கட் பிரபு: இந்நிலையில் இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் பேட்டியளித்துள்ள நடிகர் வைபவ், கோட் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக மாஸ் காட்டும் என்று விஜய் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். ஒருமுறை தன்னை தனியாக அழைத்து பேசிய விஜய், வெங்கட் பிரபுவுடன் தாங்கள் அனைவரும் எவ்வளவு நாட்களாக நண்பர்கள் என்று கேட்டதாகவும், சிறு வயதில் இருந்தே நண்பர்கள் என்று தான் கூறிய நிலையில், வெங்கட் பிரபு மிகவும் பயங்கரமாக படம் எடுப்பதாகவும் தனக்கு மட்டும்தான் தெரியும் இந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடிக்கும் என்றும் ஆனால் ஒன்றுமே தெரியாதபடி ஓரமாக வெங்கட் பிரபு நின்றுக் கொண்டிருப்பதாக கூறியதாகவும் வைபவ் தெரிவித்துள்ளார்.


வெங்கட் பிரபுவின் ஸ்டைல்: தொடர்ந்து வைபவ், அதுதான் வெங்கட் பிரபுவுன் புது யுத்தி என்று விஜய்யிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஒருநாளாவது சூட்டிங் ஸ்பாட்டில் டென்ஷனாகி வெங்கட் பிரபு கத்துவான் என்று தான் ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பதாகவும் ஆனால் கூலாக இருப்பதாகவும் ஆனால் அவுட்புட் மிகச்சிறப்பாக இருப்பதாகவும் விஜய் பாராட்டு தெரிவித்ததாகவும் வைபவ் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இதே கேள்வியை தான் வெங்கட்பிரபுவிடம் கேட்டதாகவும் அதுதான் ஸ்டைல் என்று அவர் பதில் கொடுத்ததாகவும் வைபவ் மேலும் கூறியுள்ளார். இதைக் கேட்டு வெங்கட் பிரபுவும் அப்படியே பழகிவிட்டதாக அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X