இதுக்கு மேலேயும் கை குலுக்குவீங்க.. அப்பவே சொல்லிருக்காருய்யா வடிவேலு.. தீயாய் பரவும் வீடியோ!

சென்னை: கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ள நிலையில் நடிகர் வைபவ் வடிவேலுவின் வீடியோ ஒன்றை ஷேர் செய்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலக நாடுகள் பெரும் பீதியடைந்துள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸ் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்டுள்ளது.

உலகம் முழுக்க ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

தடுப்பு நடவடிக்கை

தடுப்பு நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழக அரசும் பள்ளிகள் மூடல், திரையரங்குகள் மூடல் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. திரைத்துறை சார்பிலும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரமாக இருங்கள்

பத்திரமாக இருங்கள்

பிரபலங்கள் பலரும் கொரோனா பரவுவதை தடுக்க மக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறி வருகின்றனர். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொடுதல் மூலம் கொரோனா பரவுகிறது என்பதால் கைக்குலுக்குவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் வைபவும் தனது டிவிட்டர் பக்கத்தில் பத்திரமாக இருங்கள் என டிவிட்டியுள்ளார்.

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

கூடவே ஒரு வீடியோவையும் ஷேர் செய்திருக்கிறார் வைபவ். அதாவது, ஐயா படத்தில் இடம்பெற்றுள்ள வடிவேலுவின் காமெடிதான் அது. எங்கேயெல்லாம் கை வைத்துவிட்டு எப்படியெல்லாம் கை வைத்து விட்டு கைக்குலுக்குகிறார்கள் என்று வெளுத்து வாங்கியிருப்பார் நடிகர் வடிவேலு. அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வணக்கம் சொல்வது

இந்த வீடியோவை பார்த்த பிறகு நிச்சயமாய் யாரும் யாருக்கும் கைகொடுக்க மாட்டார்கள். இந்த வீடியோவை பார்த்துவிட்டால், யாரு கை கொடுத்தாலும் வடிவேலு பேசியதுதான் ஞாபத்திற்கு வரும். அதுவும் இப்போது இருக்கும் சூழ்நிலையில் யாரும் கை குலுக்கவே மாட்டார்கள். உலக தலைவர்களே கை குலுக்குவதை தவிர்த்து கைகளை குவித்து வணக்கம் சொல்லும் பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X