சந்திரேலேகா சீரியல் புகைப்படம்.. பிக் பாஸ் வனிதாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்!

சென்னை : பிக் பாஸ் வனிதா சந்திரலேகா நாடகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு சரிகமா நிறுவனம் தயாரிப்பில் தயாரிக்க பட்டு வந்த சந்திரலேகா எனும் நாடகத்தில் தைரியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் . தற்போது அந்த நாடகத்தில் வனிதா காட்சிகள் இடம் பெறவில்லை. மீண்டும் வனிதாவின் கதாபாத்திரம் வரலாம் என்று எதிர்பார்க்கபட்டு வருகிறது .

Actor vanitha vijayakumar instagram post

வனிதா பிக்பாஸ் வீட்டின் தைரியமான பெண்மணி என்ற பெயரை வாங்கியவர். பல பிரச்சனைகள் பிக்பாஸ் வீட்டில் நிகழும் போது மிக தைரியமாக எதிர்த்து பேசியிருக்கிறார். தனது நிஜவாழ்விலும் பல போராட்டங்களை சந்தித்து வந்தவரே வனிதா இதனால் வாழ்வில் எந்த ஒரு பிரச்சனை ஏற்பட்டாலும் மனம் தளராமல் போராடி வருகிறார் .

சமீபத்தில் வனிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியின் இறுதிபோட்டியில் சிறப்பாக சமைத்து குக் வித் கோமாளி தலைப்பை சிறப்பாக வென்றிருந்தார் வனிதா .

Actor vanitha vijayakumar instagram post

வனிதா வெற்றி அடைந்த எபிஸோடு நேற்று தான் ஒளிப்பரப்பானது . இதனையடுத்து பலரும் வனிதாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். வனிதா பிக்பாஸ் தலைப்பை கைபற்றாமல் விட்டிருந்தாலும் தற்போது குக் வித் கோமாளி தலைப்பு அவருக்கு ஆறுதலை தந்துள்ளது .'
வனிதா நன்றாக சமைப்பார் என்பது பிக்பாஸ் பார்த்த அனைவருக்கும் தெரியும், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வரை வனிதா தான் அதிக முறை சமையல் அணியில் பங்கேற்றார். அந்த அளவுக்கு வனிதா சிறப்பாக சமைப்பார். தற்போது வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்திரலேகா நாடகத்தில் நடித்த போது எடுக்கபட்ட புகைப்படங்களை பதிவேற்றயிருக்கிறார். அதில் அந்த நாடகத்தை நினைவுகூர்ந்து இருப்பதாக வனிதா கூறியுள்ளார் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X