கௌதம் மேனனின் ஜோஷ்வா இமை போல் காக்க... எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை: வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் படம் ஜோஷ்வா: இமை போல் காக்க'. வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் வருண், ராஹி, கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் மாஸ் அண்ட் கிளாசான இயக்குநர் என்றால் அது கௌதம் வாசுதேவ் மேனன் தான். மாதவன், கமல்ஹாசன், அஜித், சூர்யா, தனுஷ், விக்ரம், சிம்பு என பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார். இவரின் படங்களில் இடம்பெறும் காதல் காட்சிகளை சும்மா அப்படி இருக்கும். சிம்பு த்ரிஷா நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் ''இந்த உலகத்துல இருக்குற எல்லாப் பொண்ணுங்களையும் தங்கச்சியா ஏத்துக்குறேன், உன்னத் தவர என்ற வசனம் ஆண்டுகள் பல கடந்தும் டிரெண்டிங்கில் உள்ளது.

actor varun starring Joshua Imai Pol Kaakha to release worldwide on March 1st

கௌதம் வாசுதேவ் மேனன்: இப்படி இயக்குநராக அதிரடி கட்டிவந்த இயக்குநர் கௌதம் மேனன், 2020 ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் முழுநேர நடிகராக மாறிப்போனார். துருவநட்சத்திரம் திரைப்படத்தால் வந்த கடனால் திக்கு முக்காடி போன கௌதம் மேனன், கடனை அடைக்க தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் கடைசியாக விஜய் நடித்த லியோ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஜோஸ்வா இமை போல் காக்க: கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் தான் ஜோஸ்வா இமை போல் காக்க, இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அந்த ஆண்டே முடிந்துவிட்ட நிலையில், படம் வெளியாவதில் பல சிக்கல்களை சந்தித்த நிலையில், இத்திரைப்படம் மார்ச் 1ந் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வத் தகவலை வெளியிட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமா ன வருண் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராக்கே என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், யோகிபாபு, டிடி, கிருஷ்ணா, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி என்று பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராக்கே, பிக்பாஸ் சீசன் போட்டியாளர் ஆரோவின் காதலி ஆவார்.

படக்குழு விளக்கம்: படங்கள் என்றாலே பாடல் எல்லாம் தரமானதாக இருக்கும் என்பதால், இப்படத்திற்கு கார்த்திக் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. படத்தை கௌதம் அவர்கள் முதலில் எடுக்கப்போவதாக சொன்னபோது இது தளபதி விஜய் அவர்களை வைத்து எடுக்க முயற்சி செய்து பின் கைவிடப்பட்ட யோகனன் படம்தான் என்றும், தலைப்பை மட்டும் மாற்றி தற்பொழுது எடுப்பதாகவும் சில வதந்திகள் இணையத்தில் பரவியது. இதுகுறித்து விளக்கம் அளித்த படக்குழு யோகனன் படத்திற்கும் இதற்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்றும் இந்தப் படம் பணக்கார பெண் ஒருவருக்கு மெய்க்காப்பாளராக வரும் வருண் அவர்களைப் பற்றிய கதை என்றும் விளக்கம் கொடுத்தது.

இருவருக்கும் முக்கியமான படம்: வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வருண் இதில் லீட் ரோலில் நடித்துள்ளார்.. இந்த படம் பிக் பாஸ் வருணுக்கு மட்டுமின்றி கௌதம் மேனனுக்கும் ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X