Vasanth Ravi: ரகுவரன், கமல்ஹாசன் மாதிரி இருக்கீங்கன்னு ரஜினி சொன்னார்.. வசந்த் ரவி சுவாரஸ்யம்!

சென்னை: நடிகர் வசந்த் ரவி தரமணி, ராக்கி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது ரஜினியின் மகனாக ஜெயிலர் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

ஜெயிலர் படத்தின் ட்ரெயிலர் நேற்றைய தினம் ரிலீசான நிலையில், அதில் ரஜினி வசந்த் ரவியின் ஷுவிற்கு பாலீஷ் போடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

Actor Vasanth Ravi Hails Rajinikanth and points out his appreciation on his previous movies

ஹீரோவாக நடித்துவரும் தான் ஜெயிலர் படத்தில் நடிக்க விருப்பத்துடன் ஓகே சொன்னதாகவும் அதற்கு முழுக்க முழுக்க ரஜினி சார்தான் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வசந்த் ரவியை பாராட்டிய சூப்பர்ஸ்டார்: நடிகர் வசந்த் ரவி தமிழில் சிறப்பான நடிகராக பார்க்கப்படுகிறார். ஆண்ட்ரியாவுடன் வசந்த் ரவி இணைந்து நடித்திருந்த தரமணி மிகப்பெரிய என்ட்ரியை இவருக்கு கொடுத்தது. இந்தப் படம் கடந்த 2017ம் ஆண்டில் வெளியாகி மாஸ் காட்டியது. தொடர்ந்து 4 ஆண்டுகள் கழித்தே இவரது ராக்கி படம் ரிலீசானது. இந்த இடைவெளிக்கும் காரணம் சொல்கிறார் வசந்த். அந்த கேரக்டர் சிறப்பாக இருந்ததாகவும் அதை சிறப்பாக வெளிப்படுத்த இந்த இடைவெளி தேவைப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

Actor Vasanth Ravi Hails Rajinikanth and points out his appreciation on his previous movies

பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தற்போது அடுத்தடுத்து நான்கைந்து படங்களில் நடித்துவிட்டதாகவும் அடுத்தடுத்த சில மாதங்களின் இடைவெளிகளில் இந்தப் படங்கள் ரிலீசாகவுள்ளதாகவும் வசந்த் ரவி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இவரது அஸ்வின்ஸ் படம் வெளியாகி மிரட்டியது. மிகப்பெரிய ஹிட்டாகவும் ஆனது. இந்தப் படத்தின் வரவேற்பை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகமும் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக ஜெயிலர் படத்திலும் நடித்து முடித்துள்ளார் வசந்த்.

இந்தப் படத்தில் ரஜினியின் மகனாக நடித்துள்ளார் வசந்த் ரவி. தொடர்ந்து ஹீரோவாக நடித்துவரும் தான், இந்தப் படத்தில் ஹீரோ அல்லாத கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முழுக்க முழுக்க ரஜினி சார்தான் காரணம் என்றும் நெல்சன் திலீப்குமார் இயக்கமும் முக்கியமான காரணம் என்றும் வசந்த் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரஜினியுடன் நெருக்கமாக நடிப்பதன்மூலம் அதிகமான விஷயங்களை தான் கற்றுக் கொள்ள முடியும் என்று நம்பியதாகவும் கூறியுள்ளார்.

Actor Vasanth Ravi Hails Rajinikanth and points out his appreciation on his previous movies

முன்னதாக தரமணி படத்தின் ரிலீசின்போது தன்னிடம் பேசிய ரஜினிகாந்த், அந்தப் படம் குறித்தும் தனது நடிப்பு குறித்தும் தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு மேல் பேசி பாராட்டு தெரிவித்ததாகவும் படத்தின் பல இடங்களில் தான் ரகுவரனை நினைவுப்படுத்தியதாகவும் அவரது எனர்ஜி, தன்னிடம் காணப்பட்டதாகவும் வசந்த் ரவி கூறியுள்ளார். தொடர்ந்து ராக்கி படத்தின் ரிலீசை தொடர்ந்து தன்னிடம் பேச ரஜினி மேலும் அதிக நேரம் எடுத்துக் கொண்டதாகவும் 20 நிமிடங்கள் தன்னிடம் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

Actor Vasanth Ravi Hails Rajinikanth and points out his appreciation on his previous movies

இந்தப் பேச்சின்போது ராக்கி படத்தில் பல இடங்களில் ரகுவரனை மட்டுமில்லாமல் கமலின் எனர்ஜியையும் வசந்திடம் பார்த்ததாக ரஜினி பாராட்டியதாக வசந்த் ரவி தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரகுவரன், கமல்ஹாசனின் எனர்ஜி தன்னுடைய நடிப்பில் தெரிந்ததாக மற்றொரு ஜாம்பவான் கூறியது, தன்னுடைய வாழ்க்கையின் ஃபீல் குட் தருணம் என்றும் வசந்த் ரவி நெகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X