Actor Vasanth ravi: குறைந்தபட்ச மரியாதையை கொடுங்கள்.. வசந்த் ரவி அதிர்ச்சிப்பதிவு!
சென்னை: நடிகர் வசந்த் ரவி தரமணி படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து ராக்கி, அஸ்வின்ஸ், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார். தற்போது வெப்பன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே பிரியா இயக்கத்தில் பொன் ஒன்று கண்டேன் என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இந்த படம் படத்தின் ரிலீஸ் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இந்த படம் விரைவில் தனியார் தொலைக்காட்சியில் திரையரங்கிற்கு முன்னதாக வெளியாக உள்ளதாக பிரமோ மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வசந்த் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களிடம் தொடர்பு கொள்ளாமல் சின்ன திரையில் இந்த படம் வெளியாவது குறித்து அவர் வேதனை தெரிவித்துள்ளார். தற்போது இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தன்னுடைய அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். இந்தப் படம் சிறப்பாக வருவதற்காக தானும் அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பிரியா மற்றும் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் அதிகமாக உழைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் வசந்த் ரவி: நடிகர் வசந்த் ரவி அடுத்தடுத்த படங்களால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றுள்ளார். தரமணி, ராக்கி, அஸ்வின்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர் படத்திலும் நெகட்டிவ் ஷேடில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். ரஜினியின் மகனாக இந்த படத்தில் நடித்து துவக்கத்தில் அனுதாபங்களை அள்ளிய அவர் அடுத்தடுத்து மிரட்டலாக தன்னுடைய நடிப்பில் மாற்றங்களை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது அவரது நடிப்பில் வெப்பன் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பொன் ஒன்று கண்டேன் படம்: இதனிடையே கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா ஆகிய படங்களை இயக்கிய பிரியா இயக்கத்தில் பொன் ஒன்று கண்டேன் என்ற படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இந்த படம் விரைவில் ரிலீஸ் தேதியை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது இந்தப் படம் திரையரங்கில் ரிலீசாவதற்கு முன்னதாக தனியார் தொலைக்காட்சியில் வெளியாக உள்ளதாக பிரமோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த பிரமோ குறித்து தற்போது வசந்த் ரவி வேதனை தெரிவித்துள்ளார்.
வசந்த் ரவி கேள்வி: இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். தங்களிடம் இது குறித்து எந்த தொடர்பும் எந்த ஆலோசனையும் பெறாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் இது உண்மையா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். ஜியோ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பொன் ஒன்று கண்டேன் படம் குறித்த இந்த அறிவிப்பு யாரிடமும் தொடர்பு கொள்ளாமல் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு தங்களிடம் எந்தவிதமான ஆலோசனையும் பெறாமல் சின்ன திரையில் வெளியாகியுள்ள அறிவிப்பை பார்ப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும் வருத்தமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச மரியாதையை கொடுங்கள்: இந்த படத்திற்காக அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பிரியா மற்றும் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கடுமையாக உழைத்து உள்ளதாகவும் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த படக்குழுவிற்கு தெரிவிக்கப்படாமல் நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வணிக ரீதியாக தயாரிப்பாளர்கள் எடுக்கும் முடிவுகளில் கருத்து சொல்ல நடிகர்களுக்கும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் உரிமை இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர் ஆனால் இதுபோன்ற அறிவிப்புகளை மேற்கொள்வதற்கு முன்னதாக குறைந்த பட்சம் மரியாதைக்காகவாவது சம்பந்தப்பட்டவர்களிடம் தெரியப்படுத்துங்கள் என்றும் படக்குழுவினர் மூலம் தெரிந்து கொள்ளாமல் சமூக வலைதளங்கள் மூலமாக தெரிந்து கொள்வது மன வருத்தத்தை அளிப்பதாகவும் அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











