முதல் ஆளாக அஜித் பட சூட்டிங்கை முடித்த நடிகர்.. அப்ப தீபாவளி ரிலீஸ் கன்பார்ம்தான்!

ஐதராபாத் : நடிகர் அஜித்குமார் நடிப்பில் தற்போது ஏகே 61 படம் சிறப்பான வகையில் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் அவருடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். முக்கியமான கேரக்டரில் ராஜதந்திரம் நடிகர் வீராவும் நடித்திருந்தார்.

பேங்க் கொள்ளையை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகி வருகிறது. ஐதராபாத்தில் இதற்கான செட் போடப்பட்டு சூட்டிங் நடைபெற்று வருகிறது.

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்தின் வலிமை படம் கடந்த பிப்ரவரியில் திரையரங்குகளில் ரிலீசானது. ரசிகர்கள் இந்தப் படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்கொண்ட நிலையில் படம் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆயினும் படம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

கலவையான விமர்சனங்கள்

கலவையான விமர்சனங்கள்

அஜித்துடன் ஹெச் வினோத் -போனிகபூர் இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்திருந்தது. முதல் படம் நேர்கொண்ட பார்வையில் அஜித் பாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடித்திருந்ததால் அந்தப் படத்திற்கு அந்த அளவிற்கு எதிர்பார்ப்பு ஏற்படவில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து ரிலீசான வலிமை படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர்.

3வது முறையாக இணைந்த கூட்டணி

3வது முறையாக இணைந்த கூட்டணி

இதனிடையே தற்போது இதே கூட்டணி மூன்றாவது முறையாக ஏகே61 படத்திற்காக இணைந்துள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த இரு மாதங்களுக்கு முன்பே துவங்கப்பட்டு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கென பேங்க் மற்றும் மவுண்ட் ரோடு செட் போடப்பட்டு சூட்டிங் நடைபெற்று வருகிறது.

இரட்டை கேரக்டர்கள்

இரட்டை கேரக்டர்கள்

இந்தப் படத்தில் அஜித் வில்லனாகவும் ஹீரோவாகவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் நீண்ட தாடியுடன் காதில் குட்டி கம்மல், கூலர்ஸ் சகிதம் அஜித்தின் லுக் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதனிடையே அவ்வப்போது சூட்டிங்கின்போது அஜித்துடன் மற்றவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

சூட்டிங்கை முடித்த வீரா

சூட்டிங்கை முடித்த வீரா

இந்தப் படத்தில் ராஜதந்திரம் நடிகர் வீராவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். அஜித்தின் பேங்க் கொள்ளை கேங்கில் இவர் ஒருவராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் இன்றைய தினம் படத்தின் சூட்டிங்கை முதல் நடிகராக முடித்துள்ளார். இதையொட்டி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றையும் அஜித்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அஜித் ஒரு ஜென்டில்மேன்

அஜித் ஒரு ஜென்டில்மேன்

அதில் அஜித் போன்ற ஒரு ஜென்டில்மேனுடன் பணிபுரிந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவருடன் இணைந்து இனிமேல் நடிப்பேனோ இல்லையோ ஆனால் அவர் தன்னிடம் பாசிட்டிவ்வான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சில நாட்களில் அஜித் தன்னை வாழ வைத்ததாகவும் மற்றவர்களை வாழ வைக்க தூண்டியதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X