மஞ்சப்பை இரண்டாம் பாகம்.... அக்டோபரில் சூட்டிங்.... சூப்பரப்பு

சென்னை : நடிகர் விமல் தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து கிராமம் சார்ந்த கதைகளில் இவரை காண முடிகிறது. இவரது நடிப்பில் வெளிவந்த மஞ்சப்பை சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

தற்போது இந்த படத்தை இயக்கிய ராகவன் இயத்தில் மீண்டும் இணையவுள்ளார் விமல். மஞ்சப்பை படத்தின் இரண்டாவது பாகமாக இந்த படம் உருவாகவுள்ளது.

 கிராமத்து கதாபாத்திரங்கள்

கிராமத்து கதாபாத்திரங்கள்

நடிகர் விமல் தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு கிராமத்து கதாபாத்திரங்கள் சிறப்பாக பொருந்துகின்றன. முன்னதாக சிறிய சிறிய கேரக்டர்களில் நடித்துவந்த இவர், பாண்டிராஜின் பசங்க படத்தின்மூலம் அறிமுகமாகி சிறப்பான வரவேற்பை பெற்றார்.

மீண்டும் சூட்டிங்

மீண்டும் சூட்டிங்

தொடர்ந்து களவாணி, வாகை சூட வா, கலகலப்பு, தேசிங்கு ராஜா, கலகலப்பு 2, மஞ்சப்பை உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றார். கொரோனா காரணமாக வீட்டில் தன்னுடைய குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வந்த விமல், தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

அக்டோபரில் சூட்டிங்

அக்டோபரில் சூட்டிங்

இந்நிலையில் டைரக்டர் ராகவனுடன் மஞ்சப்பை படத்தின் இரண்டாவது பாகத்தில் விமல் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மஞ்சப்பை 2 என இந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த ராஜ்கிரண், இந்த படத்திலும் இணையவுள்ளார். படத்தின் சூட்டிங் வரும் அக்டோபரில் துவங்கவுள்ளது.

நகைச்சுவை படம்

நகைச்சுவை படம்

கடந்த 2014ல் வெளியான மஞ்சப்பை படம் நகைச்சுவை படமாக வெளியானது. இதில் விமலுக்கு லஷ்மி மேனன் ஜோடியாகியிருந்தார். ரகுநந்தன் படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தில் தாத்தா -பேரன் பாசம் சிறப்பாக பேசப்பட்டது. சற்குணம் பிரதர்ஸ் மற்றும் லிங்குசாமி பிரதர்ஸ் இணைந்து படத்தை தயாரித்திருத்னர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X