Vemal: பசங்க பட வாய்ப்பை அந்த நடிகர்தான் வாங்கி கொடுத்தாரு.. நடிகர் விமலின் ஓபன் ஸ்டேட்மெண்ட்!
சென்னை: நடிகர் விமல் பசங்க படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர். இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். முன்னதாக குருவி, கில்லி, கிரீடம் போன்ற படங்களில் இவர் சிறிய வேடங்களில் நடித்திருந்தார்.
பசங்க படத்தில் சிறுவர்களுக்கிடையிலான ஈகோவை மையமாக வைத்து கதைக்களத்தை அமைத்திருந்தார் பாண்டிராஜ். இந்தப் படத்தில் விமலுக்கு காட்சிகள் குறைவு என்ற போதிலும் தன்னுடைய வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியிருந்தார். பேமிலி சென்டிமெண்டையும் மையமாக வைத்து இந்தப்படம் எடுக்கப்பட்ட நிலையில் இந்தப் படத்தின் வாய்ப்பு தனக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து தற்போது விமல் பேசியுள்ளார்.

நடிகர் விமல்: நடிகர் விமல் சினிமாவில் நடிக்கும் ஆசையில் கிடைத்த வேடங்களில் எல்லாம் நடித்து வந்தார். அந்த வகையில் கில்லி, குருவி, கிரீடம் போன்ற படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ளார். இதனிடையே இவருக்கு பசங்க படம் மூலம் ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் இவருக்கு அதிகமான காட்சிகள் இல்லாத நிலையிலும் இந்த கேரக்டர் அவருக்கு சிறப்பான என்ட்ரியை சினிமாவில் பெற்றுக் கொடுத்தது. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சிறுவர்களுக்கிடையிலான ஈகோமை கதைக்களமாக கொடுத்திருந்தார் இயக்குநர். படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக அமைந்திருந்தது.
பசங்க பட வாய்ப்பு: இதனிடையே இந்தப் படத்தின் வாய்ப்பு தனக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து விமல் தன்னுடைய சமீபத்திய பேட்டியொன்றில் வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதிதான் தனக்கு இந்த படம் குறித்து கூறியதாக விமல் தெரிவித்துள்ளார். சசிக்குமார் தயாரிப்பில் புதிய படம் ஒன்று உருவாகவுள்ளதாகவும் அந்த கேரக்டர் தனக்கு செட் ஆகும் என்று தோன்றுவதாகவும் விஜய் சேதுபதி தன்னிடம் கூறியதாகவும் விமல் கூறியுள்ளார். அந்த நேரத்தில் தான் ஒரு பெண் கேரக்டர் செய்ததால் மீசை, தாடி இல்லாமல் இருந்ததாகவும் அதே கெட்டப்புடன் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரை சந்தித்ததாகவும் விமல் மேலும் தெரிவித்துள்ளார்.
ரிஜெக்ட் செய்த இயக்குநர்: தன்னை அந்த கெட்டப்பில் பார்த்த பாண்டிராஜ், செட் ஆகாது என்று கூறிவிட்டதாகவும் தொடர்ந்து ஒரு விளம்பரப் படத்தில் தான் நடித்திருந்த வீடியோவை காட்டியபின்பு தயாரிப்பாளர் இது நீங்கள்தானா என்று கேட்டு பாண்டிராஜிடமும் கூப்பிட்டு காட்டியதாகவும் விமல் மேலும் கூறியுள்ளார். இதையடுத்தே அந்தப் படத்தின் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பசங்க படம் ஏற்படுத்திக் கொடுத்த சிறப்பான அறிமுகத்தை தொடர்ந்தே களவாணி, கலகலப்பு, தூங்கா நகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா ஆகிய படங்களில் நடித்தார் விமல்.
விலங்கு வெப் தொடர்: தொடர்ந்து சில படங்கள் சரியாக போகாத நிலையில், விலங்கு என்ற வெப் தொடர் மூலம் சிறப்பான கம் பேக் கொடுத்துள்ளார் விமல். கடந்த ஆண்டில் இவரது சார்,போகுமிடம் வெகு தூரமில்லை படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், அடுத்ததாக தேசிங்கு ராஜா 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இவரது படங்கள் பசங்க மற்றும் வாகை சூடவா தேசிய விருது பெற்ற நிலையில் விமலுக்கும் நல்ல பெயரை பெற்றுத் தந்தன.


Click it and Unblock the Notifications











