Vengal Rao: பணம் கொடுத்தவங்களுக்கு நன்றி.. வெங்கல் ராவ் நெகிழ்ச்சி வீடியோ!
சென்னை: ஸ்டண்ட் கலைஞராக தன்னுடைய பயணத்தை கோலிவுட்டில் துவங்கிய வெங்கல் ராவ் தொடர்ந்து வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி கலாட்டா செய்தவர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் தன்னுடைய ஒரு கை மற்றும் ஒரு கால் செயலிழந்து விட்டதாகவும் தன்னால் சரியாக பேச முடியவில்லை என்றும் வெங்கல் ராவ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தனக்கு சக நடிகர்கள் மற்றும் நடிகர் சங்கம் ஆகியவை சிகிச்சைக்காக பண உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து சிம்பு, ஐஸ்வர்யா ராஜேஷ், கேபிஒய் பாலா, வடிவேலு உள்ளிட்ட பலரும் வெங்கல் ராவின் மருத்துவ சிகிச்சைக்காக பண உதவி செய்திருந்தனர்.

நடிகர் வெங்கல் ராவ்: நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் துணை நடிகராக காமெடி கலாட்டா செய்தவர் வெங்கல் ராவ். ஆந்திராவை சேர்ந்த இவர் ஃபைட்டராக தன்னுடைய கேரியரை துவங்கியவர். தொடர்ந்து வடிவேலுவுடன் இணைந்து பல காமெடி கேரக்டர்களின் நடித்துள்ளார். வடிவேலுவின் ரீ-என்ட்ரி படமான நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் வெங்கல் ராவிற்கு நடிகர் வடிவேலு நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்ட வெங்கல் ராவ், தொடர்ந்து அதற்காக சிகிச்சை எடுத்துவந்தார்.
உடல்நிலை பாதிப்பு: இந்நிலையில் தன்னுடைய ஒரு கால் மற்றும் ஒரு கை விழுந்து விட்டதாகவும் தன்னால் சரியாக பேச முடியவில்லை என்றும் சமீபத்தில் வீடியோ வெளியிட்டு சக நடிகர்கள் மற்றும் நடிகர் சங்கம் ஆகியவை தனக்கு சிகிச்சைக்காக உதவ வேண்டும் என்றும் வெங்கல் ராவ் கேட்டுக் கொண்டிருந்தார். தொடர்ந்து நடிகர் சிம்பு 2 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்கினார். கேபிஒய் பாலா ஒரு லட்சமும் நடிகர் வடிவேலு ஒரு லட்சமும் ஐஸ்வர்யா ராஜேஷ் 25 ஆயிரம் பல நடிகர், நடிகைகள் சில ஆயிரங்களை வெங்கல் ராவிற்கு கொடுத்திருந்தனர். நடிகர் சங்கமும் ரூபாய் 10,000 நிதியுதவி வழங்கியிருந்தது.
நன்றி தெரிவித்து வீடியோ: இந்நிலையில் தனக்கு பண உதவி செய்த அனைவருக்கும் வெங்கல் ராவ் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். சிம்பு, கேபிஒய் பாலா, ஐஸ்வர்யா ராஜேஷ், வடிவேலு என அனைவரது பெயர்களையும் குறிப்பிட்டு அவர்கள் கொடுத்த பண உதவியும் இந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இவர்கள் அனைவருக்கும் தனது நன்றியையும் வெங்கல் ராவ், இந்த வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் செய்த உதவி: வடிவேலுவுடன் வெங்கல் ராவ் அதிகமான படங்களில் நடித்துள்ள நிலையில் சிம்பு, ஐஸ்வர்யா ராஜேஷ், பாலா உள்ளிட்டவர்கள் வெங்கல் ராவிற்கு பண உதவி செய்திருந்தனர். இந்நிலையில் வடிவேலு தொடர்ந்து மௌனம் சாதித்து வந்தார். இதுகுறித்து சினிமா விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்பினர். இதையடுத்து நடிகர் வடிவேலுவும் வெங்கல் ராவிற்கு ஒரு லட்சம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் சங்கம் உள்ளிட்ட யாரையும் மறக்காமல் வெங்கல் ராவ் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் நன்றியை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











