அடுத்த அதிர்ச்சி.. கொரோனா பாதிப்பு காரணமாக நடிகர் வெங்கட் சுபா காலமானார்.. சோகத்தில் திரையுலகம்
சென்னை: மொழி, அழகிய தீயே, கண்ட நாள் முதல் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகர் வெங்கட் சுபா இன்று காலமானார்.
Recommended Video
கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் வெங்கட் சுபா உயிரிழந்தது தமிழ் சினிமா உலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஏகப்பட்ட சின்னத்திரை சீரியல்களிலும் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார்.

வெங்கட் சுபா காலமானார்
கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய்க்கு தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் இரையாகி வருகின்றனர். இந்நிலையில், இன்று நடிகரும் விமர்சகருமான வெங்கட் சுபா உயிரிழந்தது தமிழ் திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ஐசியூவில் போராட்டம்
கொரோனா உறுதியான நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் வெங்கட் சுபா. அவரது உடலில் ஆக்ஸிஜன் அளவு சரியத் தொடங்கிய நிலையில், ஐசியூவில் வைத்து கடந்த 10 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும், அவரை காப்பாற்ற முடியவில்லை.

பிரபலங்கள் இரங்கல்
மொழி, கண்ட நாள் முதல், அழகிய தீயே உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ள வெங்கட் சுபா, யூடியூப் சேனலில் விமர்சகராகவும் செயல்பட்டு வருகிறார். அவரது மறைவு செய்தியை அறிந்த திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கண்ணீர் அஞ்சலி
அவரது மறைவால் வாடி தவிக்கும் குடும்பத்தினருக்கும் பல பிரபலங்கள் ஆறுதல் சொல்லி வருகின்றனர். ரசிகர்கள் வெங்கட் சுபாவின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸுக்கு இன்னும் எத்தனை மக்களை பலி கொடுக்க போகிறோம் என்றும் பலர் கதறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











