Don't Miss!
- News
ஈரோடு கிழக்கில் இதுதான் நடக்கும்.. களமிறங்கும் படை.. ரிசல்ட்டே தலைகீழாகும்! அடித்து சொன்ன எக்ஸ்பர்ட்
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Lifestyle
பெண்கள் வயாகரா எடுத்துக்கொள்ளலாமா? எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
- Technology
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
தெலுங்கில் ரீமேக்காகும் ப்ரோ டாடி .. யார் நடிக்கிறார்கள் தெரியுமா?
சென்னை: நடிகராக இருந்து இப்பொழுது இயக்குனர் அவதாரம் எடுத்து அடுத்தடுத்த படங்களின் மூலம் மிரட்டி வருகிறார் நடிகர் பிரித்விராஜ்
மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிஃபர் படத்தை தொடர்ந்து ப்ரோ டாடி என்ற படத்தை இயக்கியுள்ளார்
நேரடியாக ஓடிடியில் வெளியான ப்ரோ டாடி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில் இப்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கூட்டணி அமைக்கும் வெற்றிமாறன்.. உருவாகும் மாஸ் கூட்டணி!

இயக்குனராக அறிமுகம்
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பிரபலமான ஹீரோவாக உள்ளவர்கள் பிரித்விராஜ். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். இதுவரை நடிகராக மட்டும் பலருக்கும் பரிச்சயமான பிரித்விராஜ் இப்பொழுது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு லூசிஃபர் என்ற படத்தை இயக்கி மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். மோகன்லால்,மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அரசியல் சூழ்ச்சிகளை கொண்ட அதிரடி ஆக்ஷன் களத்தில் வெளியான இந்த திரைப்படம் மலையாள சினிமாவில் வசூல் சாதனை படைத்தது

முதல்படமே பிளாக்பஸ்டர்
பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமான முதல் படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இப்பொழுது லூசிஃபர் தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் சிரஞ்சீவி மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான இரண்டாவது படமும் ஹிட் அடித்துள்ளது . சமீபத்தில் வெளியான ப்ரோ டாடி என்ற படத்தை பிரித்விராஜ் இயக்கியுள்ளார்.

ப்ரோ டாடி
தந்தை மகன் இதையே நடக்கும் சுவாரசியமான கதையை பின்னணியாக வைத்து வெளியான ப்ரோ டாடி ஆர்ப்பாட்டமில்லாத கலகலப்பான திரைப்படமாக வெளியானது. திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாகவும் நேரடியாக ஓடிடியில் வெளியானது. மீனா, கனிகா,முரளி கோபி,கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

தெலுங்கில் ரீமேக்
பிரித்விராஜ் இந்தப் படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் மோகன்லாலுக்கு மகனாக படத்தில் நடித்துள்ளார். இரண்டாவது முறையாக இணைந்த பிரித்விராஜ் மோகன்லால் கூட்டணி மற்றுமொரு பிளாக்பஸ்டர் வெற்றி படத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில் இப்பொழுது ப்ரோ டாடி தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. மோகன்லாலின் த்ரிஷ்யம்,தனுஷின் அசுரன் என தொடர்ந்து ரீமேக் படங்களில் நடித்து வரும் வெங்கடேஷ் ப்ரோ டாடி படத்தில் மோகன்லால் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் மகன் பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் நடிகர் ராணா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.