விரும்பியவர்களை மோசம் செய்யாதே.. விவாகரத்து விஷயத்தில் நாக சைதன்யாவை மறைமுகமாக தாக்கிய தாய்மாமா?
சென்னை: பிரபல நடிகரும் நடிகர் நாக சைதன்யாவின் தாய் மாமாவுமான வெங்கடேஷ் பதிவிட்டுள்ள டிவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் வெங்கடேஷ். 60 வயதான வெங்கடேஷ், கடந்த 30 ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவில் கோலொச்சி வருகிறார்.
ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார் வெங்கடேஷ். தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பா படத்தில் நடித்து இருந்தார் வெங்கடேஷ்.

இன்ஸ்டாவில் ஆக்ட்டிவ்
அந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இருப்பினும் பெரும் வெற்றி பெற்றது இப்படம். நடிகர் வெங்கடேஷ், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். நடிகர் வெங்கடேஷ் இதுவரை தனது குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொண்டதில்லை.

வெங்கடேஷ் பதிவால் சர்ச்சை
ஆனால் நாகசைதன்யா, சமந்தா விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு காதல், அன்பு, வாழ்க்கை, நம்பிக்கை என தினமும் ஏதோ ஒரு பதிவை வெளியிட்டு வருகிறார் வெங்கடேஷ். இந்நிலையில் நடிகர் வெங்கடேஷ் ஷேர் செய்துள்ள ஒரு பதிவு பலரது கவனத்தையும் பெற்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

எப்போதும் மோசம் செய்யாதே
அதாவது, ''உன்னை விரும்பியவர்களை எப்போதும் மோசம் செய்யாதே. உன்னை வேண்டும் என நினைப்பவர்களுக்கு பிஸியாக இருக்கிறேன் என சொல்லாதே. யார் உங்களை அதிகமாக நம்புகிறார்களோ, அவர்களை எப்போதும் மோசம் செய்யாதே. உன்னை எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்பவர்களை மறந்துவிடாதே'' என்று குறிப்பிட்டுள்ளார்.

நாக சைதன்யாவின் தாய் மாமா
நடிகர் வெங்கடேஷ் நடிகர் நாக சைதன்யாவின் தாய் மாமா ஆவார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் நாக சைதன்யா - சமந்தா விவாகரத்து விவாகரம் தொடர்பாக இப்படி பதிவிட்டுள்ளீர்களா என கேட்டு வருகின்றனர். பலரும் சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யாவை மறைமுகமாக குறிப்பிட்டுதான் வெங்கடேஷ் இப்படி பதிவிட்டுள்ளதாக கூறி வருகின்றனர். வெங்கடேஷின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











