அசுரன் ரீமேக் நரப்பா… தனுஷின் கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் சிரமப்பட்டேன்… நடிகர் வெங்கடேஷ் !
சென்னை : அசுரன் தெலுங்கு ரீமேக்கான நரப்பாவில் தனுஷின் கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் சிரமப்பட்டதாக நடிகர் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
ஒரு சண்டை காட்சியில் நடித்த பிறகு அடுத்த சண்டை காட்சிக்கு என்னால் செல்ல முடிவில்லை சோர்ந்து போனேன். இருப்பினும் இப்படத்தில் வெறித்தனமாக நடித்தேன் என்று வெங்கேஷ் கூறியுள்ளார்.
இத்திரைப்படம் அமேசான் பிரைமில் ஜூலை 20ந் தேதி வெளியாக உள்ளது.

சூப்பர் ஹிட் மூவி
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' சூப்பர் ஹிட் அடித்ததோடு தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை குவித்தது. இப்படத்தின் தெலுங்கு ரீமேக் 'நரப்பா'வில் தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேஷ், பிரியாமணி உள்ளிட்டவர்கள் நடிக்க, இயக்குநர் ஸ்ரீகாந்த் அடாலா இயக்கி இருக்கிறார்.

நரப்பா
இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அசுரன்' படத்தை எந்தவித மாற்றமும் செய்யாமல் காட்சிக்கு காட்சி அப்படியே ரீமேக் செய்துள்ளனர். இதற்கிடையே, இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் வெங்கடேஷ் எனது வாழ்க்கையில் மிகவும் சவாலான திரைப்படம் இது என்று கூறினார்.

மிகவும் சிரமப்பட்டேன்
இப்படம் மிகவும் உணர்ச்சிகரமான படம் இதில் வரும் ஆக்ஷன் காட்சிகளில் மிகவும் களைப்படைந்தேன். ஒரு காட்சியில் நடித்த பிறகு அடுத்த காட்சிக்கு என்னால் செல்ல முடிவில்லை மிகவும் சிரமப்பட்டேன். இருப்பினும் வெறித்தமான இப்படத்தில் நடித்துள்ளேன். பல வருடங்களுக்குப் பிறகு மிகவும் வலுவான ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

ஜூலை 20ந் தேதி ரிலீஸ்
இந்நிலையில் இத்திரைப்படம் அமேசான் பிரைமில் ஜூலை 20ந் தேதி வெளியாக உள்ளது. இதற்காக என் ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இன்றைய சூழ்நிலையில் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இல்லை, திரையரங்குகள் திறக்கும் வரை காத்திருப்பது சாத்தியம் இல்லாத ஒன்று எனவே ரசிகர்கள் இந்த சூழ்நிலையை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புறேன் என்று பேசினார்.


Click it and Unblock the Notifications











