Vishal Health Update: விஷாலின் இந்த நிலைமைக்கு காரணம் இதுதான்.. விச்சு விஸ்வநாத் சொல்லும் புதுக்கதை
சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலஷ்மி சரத்குமார், சந்தானம், மணிவண்ணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் மதகஜராஜா. இந்தப் படம் கடந்த 2013ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படுவதாக இருந்து, அதன் பின்னர் சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. அப்படியான நிலையில் படம் வரும் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது நடிகர் விஷால் உடல்நலக்குறைவாக காணப்பட்டார். அவரது கைகள் மிகவும் நடுங்கியதால், அவருக்கு என்ன பிரச்னை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விச்சு விஸ்வநாத் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

மதகஜராஜா படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விஷால், மிகவும் அதிகப்படியான உடல் நடுக்கத்துடன் காணப்பட்டார். அவரால் மைக்கை கூட சரியாக பிடித்து பேச முடியவில்லை. அவர் அணிந்திருந்த கண்ணாடியைக் கூட அவரால் இயல்பாக கழட்டி மீண்டும் அணியமுடியவில்லை. அந்த அளவுக்கு அவருக்கு உடல்நடுக்கம் ஏற்பட்டது. இவருக்கு வைரல் காய்ச்சல், மலேரியா காய்ச்சல் என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது. இந்தக் காரணங்கள் ஒருபுறம் இருக்க, விஷாலின் இந்த நிலைக்கு காரணம், அவருக்கு இருந்த தகாத பழக்கங்கள் எனவும் ஒரு பேச்சு வேகமாக பரவி வருகின்றது.

இப்படியான நிலையில் விஷாலைப் பார்த்ததும் , அவரது நெருங்கிய நண்பரான ஆர்யா, விஷாலை சரி செய்வதுதான் ஒரே வேலை என தனது மற்ற பணிகளை விட்டுவிட்டு, விஷாலை முழுவதுமாக சரி செய்வதே நோக்கம் என தனது நண்பர்கள் அனைவரையும் வரவழைத்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

விஷால்: இப்படியான நிலையில் நடிகர் விச்சு விஸ்வநாத் நடிகர் விஷாலின் உடல் நிலை குறித்து பேசுகையில், " நடிகர் விஷாலுக்கு குளிர் காய்ச்சல்தான். அப்படி இருந்தும் இந்தப் படத்தின் ப்ரோமோசனில் அவர் கலந்து கொள்ள காரணமே, அவருக்கு இந்தப் படத்தின் மீது இருந்த நம்பிக்கை. பலரும் கேள்வி கேட்கின்றார்கள், ஒரு நடிகர் என்பதால் அவரிடம் நாங்கள் தெரியப்படுத்தினோம். ஆனால் அவர் தான் கட்டாயம் கலந்து கொள்வேன் எனத் தெரிவித்தார்.

உடல்நிலை: நாமே சில நாட்களில் உடல்நிலை சரியில்லை என்றாலும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றோம் இல்லையா? அதுபோலத்தான் விஷால் அன்றைக்கு கலந்து கொண்டார். அவர் படத்தின் ப்ரோமோசனில் கலந்து கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சிதான். முதலில் அவரின் உடல்நிலையைப் பார்த்துவிட்டு நாங்கள் வேண்டாம் எனக் கூறினோம். ஆனால் அவர், கட்டாயம் கலந்து கொள்வேன் எனக் கூறும்போது, தடுக்க முடியுமா?

உண்மை: இப்போது அவருக்கு காய்ச்சல் குறைந்துவிட்டது. உடல்நிலை சீராகிக் கொண்டு உள்ளது. விரைவில் முழுவதுமாக சரி ஆவார். யார் யாரோ என்னென்னமோ சொல்கின்றார்கள். ஆனால் அதுவெல்லாம் உண்மையே கிடையாது. விஷாலுக்கு வந்ததைப்போல் காய்ச்சல் அனைவருக்குமே வரும்தானே" என பேசினார். இவரது இந்தப் பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











