Vidaarth First BMW Car: மெய் வருத்தக் கூலி! 25 ஆண்டு கால சினிமா வாழ்க்கை.. முதல் BMW கார் வாங்கிய விதார்த்!

சென்னை: நடிகர் விதார்த் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் கவனக்கப்படுகிற மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவர். இவரது படங்களுக்கு எனவே தனி ரசிகர்கள் பட்டாளம் தென்னிந்திய சினிமாவில் உள்ளது. விதார்த் கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து வரும் இவர் தனது குடும்பத்துடன் சென்று தனது முதல் BMW காரினை வாங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்னலே படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக அறிமுகமான இவர் படிப்படியாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக உருமாறி நிற்கிறார். விதார்த் பல படங்களில் கூட்டத்தில் ஒருவராக நடித்ததை பார்த்திருப்போம். அவர் கதாநாயகனாக மாறிய பின்னர் கதையாக ஒரு படம் ரசிகர்கள் மத்தியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து யோசித்து இவர் தனது படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Actor Vidaarth Bought His Fisrt BMW Car After His 25th Year Cinema
Photo Credit:

பெயர் சொல்லும் படங்கள்: கமர்ஷியல் வெற்றிகளுக்கு ஆசைப்படாமல் இவர் நடிக்கும் படங்கள் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருப்பது இவரது வெற்றிக்கு நிலைப்புத் தன்மைக்கு காரணம். விதார்த் மைனா படத்தில் இருந்து தான் மக்கள் மத்தியில் நல்ல அறிமுகமும் வரவேற்பும் பெறத் தொடங்கினார். அதன் பின்னர் ஒரு கிடாயின் கருணை மனு உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

முதல் கார்: அதன் பின்னர் சறுக்கலை சந்தித்தாலும் விதார்த் சினிமாவில் தனது முயற்சிகளை கைவிடவில்லை. கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான இறுகப்பற்று படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், விதார்த் தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளைக் கடந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் சென்று தனது முதல் BMW காரினை வாங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் பகிர்ந்துள்ளார்.

Actor Vidaarth Bought His Fisrt BMW Car After His 25th Year Cinema
Photo Credit:

கேப்ஷன்: மேலும் இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள BMW ஷோரூம், " எதிர்பார்த்ததைவிட சிறப்பான ஒரு புதிய தொடக்கம். நடிகர் விதார்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு புத்தம் புதிய BMW X1 உடன் மகிழ்ச்சியின் அனுபவத்தை வழங்குவதில் BMW நிறுவனத்தின் சார்பாக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். BMW இன் அற்புதமான உலகத்திற்கு வரவேற்கிறோம்" என்று தெரிவித்துள்ளது. ரசிகர்கள் விதார்த்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X