Vidarth: அமலாபாலுடன் முத்தக்காட்சியில் 20 டேக்.. மைனா படம் குறித்து விதார்த் பகிர்வு!

சென்னை: நடிகர் விதார்த் மற்றும் அமலா பால் இணைந்து நடித்த படம் மைனா. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

முன்னதாக அமலா பால் நடித்திருந்த சிந்து சமவெளி படம் அவருக்கு அதிரடி என்ட்ரியாக அமைந்தது. ஆனாலும் படம் அந்த அளவிற்கு கைக்கொடுக்கவில்லை.

இந்நிலையில் சாதாரண அப்பாவி பெண்ணாக அமலா பால் நடித்திருந்த மைனா, அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை எற்படுத்திக் கொடுத்தது.

Actor Vidarth shares his experience with Amala paul in Myna movie in Kiss scene

மைனா படத்தில் அமலா பாலுடன் முத்தக்காட்சி குறித்து பகிர்ந்த விதார்த்: நடிகை அமலா பால் மற்றும் விதார்த் இணைந்து நடித்திருந்த மைனா படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றுத்தந்தது. அமலா பாலின் மார்க்கெட்டையும் தென்னிந்திய அளவில் இந்தப் படம் உயர்த்தியது. அப்பாவி கிராமத்து பெண்ணாக, விதார்த்தை காதலித்து, அவருடன் வீட்டை விட்டு வெளியில் வந்து, இறுதியில் இறந்துப் போகும் கேரக்டரில் நடித்திருந்தார் அமலா பால். இந்த படத்தில் அவரது மைனா கேரக்டர், ரசிகர்களின் அனுதாபத்தை வெகுவாக பெற்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இவர் தமிழில் நடித்துள்ளார். இவரது அறிமுகப்படமான சிந்து சமவெளி இவருக்கு வசூல்ரீதியாக கைக்கொடுக்கவில்லை என்ற போதிலும் அதிரடியான என்ட்ரியை கொடுத்திருந்தது. இந்தப் படத்தின்மூலம் கிடைத்த மைனா பட வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.

படத்தில் அவரது குறுகுறு பார்வையும் வெள்ளந்தியான பேச்சும் நாயகனை மட்டுமில்லாமல் ரசிகர்களையும் கட்டிப் போட்டது. இந்தப் படத்தின்மூலம் விதார்த் நாயகனாக அறிமுகமாகியிருந்தார். இவரும் முதல் படம் போல இல்லாமல் தேர்ந்த நடிகரை போல தன்னுடைய நடிப்பை வழங்கியிருந்தார். ஆனாலும் சூட்டிங்கின்போது சில காட்சிகளில் நடிக்க தான் திணறியது குறித்து தனது சமீபத்திய பேட்டியில் அவர் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

Actor Vidarth shares his experience with Amala paul in Myna movie in Kiss scene

மைனா படத்தில் ஒரு பாடல் காட்சியின்போது அமலா பாலின் முகத்திற்கு நெருக்கமாக வந்து முத்தமிடுவது போல விலகி செல்வதாக ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சியில் நடிக்கத் தான் விதார்த் திணறியுள்ளார். இதில் 20 டேக்குகள் எடுத்தும் அந்தக் காட்சி சரியாக வராததால், கேமிராவை ஆஃப் செய்துவிட்டு, இதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு பின்பு அந்த காட்சி எடுக்கப்பட்டதாகவும் விதார்த் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டெவில் என்ற புதிய படத்தில் விதார்த் இணைந்துள்ளார். மிஷ்கின் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலில் முத்தக் காட்சிகளிலும் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார் விதார்த். முத்தமிடுவது போன்ற காட்சியில் நடிக்கவே தயக்கம் காட்டிய அவர், தற்போது கலவிப் பாடல் என்ற இந்தப் பாடலின்மூலம் அதிக கவனத்தை பெற்றுள்ளார். தொடர்ந்து சரத்குமாருடன் லாந்தர் படம், உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்துவருகிறார் விதார்த். வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X