விதார்த்தின் 25வது படத்தின் டைட்டில் இதுதான்.. கான்செப்ட் அதுக்கும் மேல.. என்னன்னு பாருங்க!

சென்னை: விதார்த் நடிக்கும் 25வது படத்தின் டைட்டில் மற்றும் கான்செப்ட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விதார்த் நடிப்பில் கடைசியாக 2019ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி 2 படம் வெளியானது.

தற்போது அண்ணாதுரை படத்தின் இயக்குநரான சீனிவாசன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

டைட்டில் வெளியீடு

டைட்டில் வெளியீடு

இந்தப் படத்தின் டைட்டிலை தென்னிந்திய பிரபலங்கள் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டனர். அதன்படி இந்தப் படத்திற்கு கார்பன் என பெயரிடப்பட்டுள்ளது.

இயக்குநர் சீனிவாசன்

இயக்குநர் சீனிவாசன்

இப்படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக தன்யா பாலகிருஷ்ணன் நடித்துள்ளார். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இயக்குநர் சீனிவாசன், படம் குறித்து பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

கனவுகளை அடிப்படையாக..

கனவுகளை அடிப்படையாக..

அதாவது, இந்தப் படம் கனவுகளை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நபர் கனவு காணும் அனைத்தும் நிஜ வாழ்க்கையில் நடந்தால் என்ன நடக்கும் என்பதை ஆராயும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கார்பன் பொருத்தமானது என்று நாங்கள் உணர்ந்தோம்.

கார்பன் தாளில் காப்பியாகும்

கார்பன் தாளில் காப்பியாகும்

ஏனென்றால் நாம் எழுதுவதற்கு ஒரு கார்பன் தாளைப் பயன்படுத்தும்போது, எழுதும் வார்த்தைகள் மற்றொரு தாளில் காப்பியாகும். இப்படத்திற்கு கிட்டத்தட்ட 20 தலைப்புகள் ஆப்ஷனாக வந்தது. ஆனால் எனக்கு எதிலும் திருப்தியில்லை.

மருத்துவமனையில்

மருத்துவமனையில்

இந்த படத்தை மார்ச் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால் சரியான டைட்டிலுக்காக படத்தின் ரிலீஸை தள்ளி வைத்தோம். மேலும் இப்படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் படமாக்கப்பட்டுள்ளது.

நவம்பரில் தொடங்கினோம்

நவம்பரில் தொடங்கினோம்

இந்த ஸ்கிரிப்ட்டில் ஒரு மருத்துவமனை முக்கிய பங்கு வகிக்கிறது, பெரும் தேடலுக்கு பிறகு தாம்பரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் படப்பிடிப்பு நடத்த எங்களுக்கு அனுமதி கிடைத்தது. நாங்கள் நவம்பரில் படப்பிடிப்பை மேற்கொண்டோம்.

பாதுகாப்பாக முடித்தோம்

பாதுகாப்பாக முடித்தோம்

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றினோம். ஒரு ஷாட்டில் ஈடுபட்டவர்கள் மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர், மற்றவர்கள் அனைவரும் இருப்பிடத்திலிருந்து வெளியே காத்திருப்பார்கள். சரியான நேரத்தில் படப்பிடிப்பை நாங்கள் பாதுகாப்பாக முடித்தோம், இவ்வாறு இயக்குநர் சீனிவாசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X