Vidharth: இதுக்காக 13 வருஷம் காத்திருந்தேன்.. நடிகர் விதார்த் உருக்கமான பேச்சு!
சென்னை: மைனா படத்திற்கு பிறகு அடுத்த வெற்றியை பெற 13 வருஷம் காத்திருந்தேன் என்று நடிகர் விதார்த் உருக்கமாக பேசி உள்ளார்.
இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடித்துள்ள திரைப்படம் இறுகப்பற்று.

மேலும் இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கியமாபன கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இறுகப்பற்று: பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படம் அக்டோபர் 6ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது. படத்திற்கு வெற்றி பெற்றதை அடுத்து, ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசி விதார்த்.
13 வருடம் காத்திருந்தேன்: ஒவ்வொரு படமும் வெற்றி அடைய வேண்டும் என்பதே ஒரு நடிகனின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும், ஆனால், அது நடக்கவே இல்லை என்பது தான் உண்மை. நல்ல படமாக தான் இருந்ததே தவிர, அது மக்களை கவரும் படமாக இல்லை. மைனா படம் வெளியாகி 13 வருடத்திற்கு பிறகு இப்படி ஒரு வெற்றியை என் படம் பெற்று இருக்கு என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
மிகுந்த மகிழ்ச்சி: இப்படி ஒரு வெற்றிப்படத்தில் நானும் ஒரு அங்கமா இருக்கேன். அதை அந்த படத்தின் தயாரிப்பாளரே இங்கு வந்து சொல்லும் போது, ஆனந்தமாக இருக்கிறது. இப்படி ஒரு விஷயத்திற்காகத்தான் நான்,13 ஆண்டுகளாக நான் காத்திருந்தேன். அது தற்போது நடந்திருக்கிறது. இப்படி ஒரு படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு தயாரிப்பாளருக்கு நன்றி. படத்தை பார்த்து விட்டு பலர் போன் செய்து ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க என்று என்னை பாராட்டுகிறார்கள்.

அனைவருக்கும் நன்றி: இறுகப்பற்று படம் குறித்து ஊடகத்திலும், பத்திரிக்கையிலும் நல்ல விமர்சனம் வந்துள்ளது. செய்தியாளர்கள் இந்த படத்தை நல்ல விதமாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள். ஆடியன்ஸூம் படம் பார்த்துவிட்டு, சமூக வலைதளத்தில் படத்தை புகழ்ந்து வருவதை பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நடிகர் விதார்த் பேசினார்.


Click it and Unblock the Notifications











