வெளியானது விதார்த்தின் கார்பன் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள்... ரசிகர்கள் வரவேற்பு
சென்னை : விதார்த் நடிப்பில் உருவாகி பொங்கலையொட்டி நாளைய தினம் ரிலீசாக உள்ள படம் கார்பன்.
விஜய் ஆன்டணியை வைத்து அண்ணாதுரை படத்தை இயக்கிய சீனிவாசன் படத்தை இயக்கியுள்ளார்.
த்ரில்லர் வகை படமாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை மிரட்டலாக அமைந்துள்ளது.

கார்பன் படம்
நடிகர் விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கார்பன். இது அவருக்கு 25வது படமாக அமைந்துள்ளது. விஜய் ஆன்டணியை வைத்து அண்ணாதுரை வெற்றிப்படத்தை இயக்கிய சீனிவாசன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

நாளை ரிலீஸ்
பொங்கலையொட்டி நாளைய தினம் திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளது. படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கனவில் தன்னுடைய தந்தையின் விபத்தை பார்க்கும் விதார்த் அதை நேரிலும் அனுபவித்தால் என்ன நடக்கும் என்பதை கதைக்கருவாக இந்தப் படம் கொண்டுள்ளது.

விபத்து ஏற்படுத்தும் பாதிப்பு
போலீஸ் ஆகும் லட்சியத்துடன் தீவிர முயற்சியில் உள்ள விதார்த்தின் வாழ்க்கையில் அந்த விபத்து ஏற்படுத்தும் பாதிப்பை படம் த்ரிலிங்குடன் கொண்டு செல்கிறது. பெரும்பாலும் கதை இரவிலேயே நடக்கிறது. படத்தில் தான்யா பாலகிருஷ்ணன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

சாம் சிஎஸ் இசை
தவிர இயக்குநர் மாரிமுத்து, மூணாறு ரமேஷ், பிச்சைக்காரன் மூர்த்தி, ராம்சன் வினோத் சாகர், டவுட் செந்தில், பேபி ஜானு பிரகாஷ் உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். பின்னணி இசை மிரட்டலாக அமைந்துள்ளது.

சிறப்பான திரைக்கதை
படத்தின் தயாரிப்பாளர்கள் முருகன் -பாக்கியலட்சுமி இருவரும் கதையை நம்பி படத்தை தயாரிக்க முன்வந்ததாகவும் அந்த வகையில் இந்தப் படம் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் படத்தின் இயக்குநர் சீனிவாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஸ்னீக் பீக் வெளியீடு
இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகளின் படத்தின் சிறப்பான திரைக்கதையை வெளிப்படுத்தியுள்ளன. படத்திற்கான எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளன. தன்னுடைய கனவு படுத்தும் பாட்டை விதார்த் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











