நெப்போலியன் மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர்.. தனுஷிடம் நலன் விசாரிப்பு!
சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான நெப்போலியன் துரைசாமி, தனது மகனின் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் சென்றவர், தற்போது அங்கேயே ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், நடிகர் விதார்த் நெப்போலியன் குடும்பத்தைச் சந்தித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவின் வில்லன் நடிகரான நெப்போலியன் தன்னுடைய மகன்களின் விருப்பத்திற்காக முழுவதுமாக அரசியலில் இருந்து விலகிய அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். அவ்வபோது திரைப்படங்களில் தலைகாட்டி வருகிறார் நெப்போலியன். பின் அமெரிக்காவில், ஒரு ஐடி நிறுவனத்தையும் தொடங்கி, ரூ.1000 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கிறார் நொப்போலியன். மூத்த மகன் தனுஷூக்கு திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்ட நெப்போலியன், தனது உறவுக்கார பெண்ணான அக்ஷயா என்பவரை திருமணம் செய்து வைத்தார்.
நடிகர் நெப்போலியன்: இந்த திருமணம் அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு ஜப்பானில் தடபுடலாக நடந்தது. தமிழ்நாட்டில் திருமணம் நடந்தால், எப்படி நடக்குமோ அது போல, பந்தக்கால் நடுவது, ஹல்தி கொண்டாட்டத்துடன் திருமணம் நடந்தது. தனுஷ் மற்றும் அக்ஷயா திருமணம் குறித்து பலவிதமான விமர்சனங்கள் எழுந்தாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். திருமணம் முடிந்த கையோடு அனைவரும் கப்பலில் பல மாதமாக சுற்றிவிட்டு, பல நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, திருமணமாகி பத்து மாதத்திற்கு பிறகு புகுந்த வீட்டிற்கு அக்ஷயா வந்தார். தனது மருமகள் வீட்டிற்கு வந்ததை நடிகர் நெப்போலியன் ஊரையே கூட்டி தடபுடலாக வரவேற்றார். இதையடுத்து இருவருக்கும் திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்ததை தடபுடலாக கொண்டாடினார்கள்.

திடீர் சந்திப்பு: அமெரிக்காவுக்குச் செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்தப் பிரபலங்கள் பலரும், நெப்போலியன் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்து நலம் விசாரிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில், நடிகர் விதார்த் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்றுள்ளார். இது தொடர்பாக நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனது இனிய நண்பர் , நடிகர் விதார்த் அவர்கள் தனது மனைவி, மற்றும் குழந்தையுடன் 3 வாரம் சுற்றுப் பயணமாக அமெரிக்கா வந்துள்ளார். அமெரிக்காவில் , Chicago, Orlando, Miami Milwaukee,போன்ற பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாச் சென்றுவிட்டு, கடந்த 4 நாட்களுக்கு முன்பு நாங்கள் வசிக்கும் Tennessee Nashvilleக்கு எங்களை சந்திப்பதற்காக இல்லத்திற்கு வருகை தந்தார். நான்கு நாட்கள் அவர்கள் எங்களோடு இருந்து மிகவும் சந்தோசமாக இருந்தது. அடுத்து Nashville லில் இருந்து , New York செல்வதர்க்காக, அவர்கள் எங்கள் இல்லத்தில் இருந்து பிரியா விடைபெற்ற அந்த மகிழ்வான தருணம் என பதிவிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போதுதான் விதார்த், அமெரிக்கா போகிறோம் என்றதும், என் மகள் நெப்போலியன் அங்கிளை பார்க்க வேண்டும் என்றாள். அவளில் ஆசையை நான் நிறைவேற்றி விட்டேன் என்றார். மேலும் உங்களை நான் சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி, நெப்போலியன் சார் மனசு போல மனைவி, மகன்களின் மனசும் உள்ளது. உங்கள் மனவு போலவே நல்ல மருமகளும் கிடைத்துவிட்டார் உங்களை பார்த்தத்தில் மிகவும் மகிழ்ச்சி என்று விதார்த் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











