தளபதி 65ல் அஞ்சான் பட நடிகரா? அவரே சொல்லிட்டார்.. என்னன்னு பாருங்க!
சென்னை: தளபதி 65 படத்தில் தான் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகர் வித்யூத் ஜாம்வால் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் நடிக்கும் தளபதி 65 படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. பூஜையில் விஜய் பங்கேற்ற போட்டோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது.
இந்நிலையில் இந்தப் படத்தில் அஞ்சான் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு நண்பராக நடித்த வித்யூத் ஜாம்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

நடிகர் விளக்கம்
படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் ஊடகங்களில் பரவும் இந்த தகவல் குறித்து நடிகர் வித்யூத் ஜாம்வால் தனது சமூக வலைதள பக்கத்தில் இதுதொடர்பான செய்தியை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

விருப்பமாக உள்ளேன்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, நான் காத்திருக்கிறேன். இணைந்து நடிக்கவும் விருப்பமாக உள்ளேன். ஆனால் இந்த செய்தி தவறானது.. இவ்வாறு நடிகர் வித்யூத் ஜாம்வால் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் தளபதி 65 படத்தில் அவர் இதுவரை ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே விஜய்யுடன்
வித்யூத் ஜாம்வால் ஏற்கனவே விஜய்யின் துப்பாக்கி படத்தில் அவருக்கு வில்லனாக நடித்துள்ளார். அந்த படம் பெரும் வெற்றி பெற்றது. தற்போது உருவாகும் விஜய்யின் 65வது படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார்.

பொங்கல் ரிலீஸ்
இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தளபதி 65 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











